சென்னை: முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் தொடர்பான ஆறுமுசாமி விசாரணை ஆணைய அறிக்கையின் நிறைவில் "நோய் நாடி நோய் முதல் நாடி " என்ற திருக்குறளுக்கு கருணாநிதி தெளிவுரையை மேற்கோள் காட்டி நிறைவு செய்யப்பட்டுள்ளது.
முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக விசாரிக்க அமைக்கப்பட்ட ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான விசாரணை ஆணையத்தின் அறிக்கை இன்று தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த அறிக்கையில் சசிகலா, கே.எஸ்.சிவகுமார், அப்போதைய சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், அப்போதைய சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் ஆகியோர் குற்றம் செய்தவர்களாக முடிவு செய்து, இவர்கள் மீதான விசாரணைக்கு உத்தரவிட ஆறுமுகசாமி ஆணையம் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
561 பக்கங்கள் கொண்ட இந்த அறிக்கையின் இறுதியில் "நோய் நாடி நோய் முதல் நாடி" என்ற திருக்குறளுக்கு மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி எழுதிய தெளிவுரையும், "காலாழ் களரில் நரியடும் கண்ணஞ்சா" என்ற திருக்குறளுக்கு டாக்டர் மு.வரதராசன் எழுதியை தெளிவுரையும் மேற்கோள் காட்டப்பட்டு, அறிக்கையை நிறைவு செய்துள்ளார் ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி.