சென்னை: வாடகை தாய்கள் அடைத்து வைக்கப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டப்பட்ட நிலையில் பெண் போலீஸாருடன் சென்று மருத்துவத் துறை அதிகாரிகள் நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
நடிகை நயன்தாரா - இயக்குநர் விக்னேஷ் சிவன் தம்பதிக்கு திருமணமான நான்கே மாதங்களில் குழந்தைகள் பிறந்ததுபெரும் விவாத பொருளானது. மேலும், அவர்கள் வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொண்டார்கள் என்றும், இதில்இவர்கள் விதிகளை மீறிவிட்டதாகவும் கூறப்பட்டது. இதுகுறித்து தமிழக சுகாதாரத் துறை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.
இவ்விவகாரம் ஒருபுறம் இருக்க, சட்ட விதிகளுக்கு மாறாக வணிக ரீதியிலான வாடகைத் தாய் மூலம் பலர் குழந்தை பெற்றுக்கொள்வதாக குற்றச்சாட்டு எழுந்தது. குறிப்பாக சென்னைசூளைமேடு மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் வீடுகளில் பெண்களை அடைத்து வைத்து வாடகைதாயாக பயன்படுத்துவதாக குற்றச்சாட்டு எழுந்தது. குறிப்பாக 2 தனியார் மருத்துவமனைகள் வாடகைதாய் முறையை தவறாகப் பயன்படுத்தி வருவதாக தகவல் வெளியானது.
இதையடுத்து போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை மேற்கொண்டனர். அதில் தமிழ்நாடு, குஜராத், ஆந்திரா, கர்நாடகா உட்பட பல மாநிலங்களைச் சேர்ந்த இளம் பெண்கள்மட்டுமல்லாமல் நைஜீரியா, வங்கதேசம் உட்பட வெவ்வேறுநாடுகளை சேர்ந்த பெண்களும்வாடகை தாயாக பயன்படுத்தப்பட்டு வருவது தெரியவந்தது. ஆனால், உரிய புகார் ஏதும் வராதகாரணத்தால் போலீஸார் நடவடிக்கை ஏதும் எடுக்கவில்லை. இந்நிலையில் குறிப்பிட்ட பிரபலமான 2 மருத்துவமனைகளின் சார்பில் அடிப்படை வசதிகள் ஏதும்இன்றி ஒரே வீட்டில் 15-க்கும்மேற்பட்ட கர்ப்பிணிகள் தங்க வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது. இதைத் தொடர்ந்து மருத்துவம், ஊரக சேவை பணிகள்இயக்கக அதிகாரிகள் திடீர் ஆய்வுமேற்கொண்டனர். இதற்கு வாடகை தாய்மார்களின் பராமரிப்பாளர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து பெண் போலீஸாருடன் சென்று அதிகாரிகள் சோதனையிட்டனர்.
இது தொடர்பாக மருத்துவமற்றும் ஊரக சேவை பணிகள்இயக்கக அதிகாரிகள் கூறியதாவது: சம்பந்தப்பட்ட மருத்துவமனைகள், அருகாமையில் உள்ளகுடியிருப்புகள் மற்றும் மருத்துவமனைகளின் விடுதிகளில் ஆய்வுநடத்தப்பட்டது. இதில், சிகிச்சைபெறுவோர் மட்டுமே இருந்தனர்.11 பேர் வாடகை தாயாக இருப்பதுதெரியவந்துள்ளது. சம்பந்தப்பட்டவர்கள் விதிகளின்படி, வாடகை தாயாக செயல்படுகிறார்களா என ஆய்வு செய்து வருகிறோம். சம்பந்தப்பட்ட 2 மருத்துவமனைகளும், நாங்கள் எவ்வித விதியையும் மீறவில்லை என மறுப்பு தெரிவித்துள்ளன. ஆய்வு செய்த அதிகாரிகள், இதற்கான அறிக்கையை ஓரிரு நாளில் தாக்கல் செய்வர்கள். மாநிலம் முழுவதும் மருத்துவமனைகள் விதிகளை பின்பற்றுகிறதா என்பதையும் ஆய்வுசெய்து வருகிறோம். மருத்துவமனைகள் விதிகளை மீறியிருந்தால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.