தமிழகம்

உண்மையான புரட்சித் தலைவர் ஸ்டாலின்தான்: பழனிவேல் தியாகராஜன் திடீர் புகழாரம்

செய்திப்பிரிவு

கடைக்கோடி தொண்டனான தனக்கு நிதி அமைச்சர் பதவியும், அதிகாரமும் வழங்கியதன் மூலம் உண்மையான புரட்சித் தலைவராக முதல்வர் முக.ஸ்டாலின் திகழ்கிறார் என நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேசினார்.

மதுரை மாநகர் திமுக புதிய நிர்வாகிகள் பொறுப்பேற்றதை தொடர்ந்து, செயற்குழு கூட்டம் அண்ணா நகரில் நேற்று நடந்தது. அவைத்தலைவர் ஒச்சுபாலு தலைமை வகித்தார். கோ.தளபதி, முன்னாள் அமைச்சர் பொன்.முத்துராமலிங்கம், முன்னாள் மேயர் பெ.குழந்தைவேலு, முன் னாள் எம்எல்ஏ. வி.வேலுச்சாமி, ஜெயராமன், சின்னம்மாள் உட்பட பலர் பங்கேற்றனர்.

இக்கூட்டத்தில் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேசியது: பொது நலனுக்காக இயக்கத் துக்கு வரும் தனிநபர்கள் சுயந லனுக்கோ, அரசியலுக்கோ முக் கியத்துவம் அளிக்கக்கூடாது. ஜனநாயக முறையில் பல்வேறு கருத்துகளை விவாதிப்பது நல்லது. இதில் தலைவர் எடுக் கும் முடிவுக்கு அனைவரும் கட்டுப் படுவதே சிறந்தது.

மாவட்ட செயலாளர் தகவல் தந்ததும், இக்கூட்டத்தில் பங்கேற்க சென்னையிலிருந்து வந்து திரும்புகிறேன். நமது இலக்கு இரண்டுதான். சமுதாயத்தை முன் னேற்றுவது, திமுக தலைவரின் கரங்களை பலப்படுத்தி அவரது புகழை வளர்ப்பது.

அடுத்து ஆட்சிக் காலத்தில் மதுரை மாவட்டத்தை எந்தெந்த வழியில் முன்னேற்ற முடியுமோ அதையெல்லாம் செய்ய வேண்டும். இந்த 2 இலக்குகளை செய்யவே முதல்வர் பொறுப்புகளை தந் துள்ளார். உண்மையான புரட்சித் தலைவர் நமது கட்சித் தலைவர் தான். என்னைப் போன்ற கடைக்கோடி தொண்டனுக்கும் அமைச்சர் பதவி அளித்து செயல்பட வைத் துள்ளார்.

கட்சித் தொண்டர்களுக்கும், நிர்வாகிகளுக்கும் எனது வீட்டின் கதவு எப்போதும் திறந்திருக்கும். இவ்வாறு அவர் பேசினார். நிர்வாகிகள் பேசுகையில், ‘உட் கட்சித் தேர்தல் முரண்பாடுகளை மறந்து கட்சிப் பணியாற்ற வேண்டும்’ என்றனர். திமுக தலைவரான முதல் வருக்கு வாழ்த்து தெரிவித்தும், அக்.30-ல் தேவர் ஜெயந்தியன்று பசும்பொன் வரும் முதல்வரை வரவேற்றும் தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன.

SCROLL FOR NEXT