500, 1,000 ரூபாய் நோட்டுகளை வாபஸ் பெறுவதாக பிரதமர் நரேந்திர மோடி கடந்த 8-ம் தேதி அறிவித்தார். இதைத்தொடர்ந்து கடந்த 10-ம் தேதி முதல் பழைய 500, 1,000 ரூபாய் நோட்டுகளை மாற்றவும், டெபாசிட் செய்யவும் வங்கிகளில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது.
பழைய 500, 1,000 ரூபாய் நோட்டுகளுக்குப் பதில் புதிய 2 ஆயிரம், 100, 50 ரூபாய் நோட்டுகள் மட்டுமே வழங்கப்படுகின்றன. புதிய 500 ரூபாய் நோட்டுகள் இதுவரை புழக்கத்துக்கு வரவில்லை. இதனால் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்கு சில்லறை கொடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
வங்கிகளில் இருந்த 100 ரூபாய் நோட்டுகள் வேகமாக தீர்ந்து வருவதால் மக்களுக்கு பணம் வழங்க முடியவில்லை. இது தொடர்பாக எஸ்பிஐ வங்கி அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, “பழைய 500, 1,000 ரூபாய் நோட்டுகள் மட்டுமே வங்கிகளில் டெபாசிட் செய்யப்படுகின்றன. 100, 50, 20, 10 ரூபாய் நோட்டுகளை யாரும் கொண்டு வருவதில்லை. இதனால் மக்களுக்கு அவற்றை கொடுக்க முடியவில்லை. புதிய 500 ரூபாய் நோட்டுகள் புழக்கத்துக்கு வந்தால்தான் இப்பிரச்சினைக்கு தீர்வு காண முடியும்” என்றார்.
ஏடிஎம்களில் புதிய 2 ஆயிரம், 500 ரூபாய் நோட்டுகளை எடுப்பதற்கான வசதிகள் இதுவரை ஏற்படுத்தப்படவில்லை. எனவே, 100 ரூபாய் நோட்டுகளை மட்டுமே ஏடிஎம்களில் எடுக்க முடியும். இதனால் மிகக் குறைந்த அளவே ஏடிஎம் இயந்திரத்தில் பணம் இருப்பு வைக்க முடிகிறது. எனவே, மக்கள் 2 முதல் 4 மணி நேரம் காத்திருக்க வேண்டியுள்ளது.
இது தொடர்பாக திருவல்லிக் கேணியைச் சேர்ந்த எஸ்.தேவி என்பவர் கூறும்போது, “வங்கி களில் கூட்டம் அதிகமாக இருப்ப தால் ஏடிஎம் மையத்தில் எடுத்துக் கொள்ளலாம் என நினைத்தேன். ஆனால், 2 நாட்களாக எங்கள் பகுதியில் உள்ள பெரும்பாலான ஏடிஎம் மையங்கள் மூடப்பட்டுள் ளன. திறந்துள்ள ஒருசில ஏடிஎம் மையங்களிலும் கூட்டம் கட்டுக் கடங்காமல் உள்ளது. மணிக் கணக்கில் காத்திருந்து பணம் எடுக்க வேண்டியுள்ளது’’ என்றார்.
பாரிமுனையைச் சேர்ந்த எஸ்.தனசேகர் என்பவர் கூறும் போது, “ஏடிஎம் மையங்களில் 2-வது நாளாக இன்றும் பணம் இல்லை. திறந்துள்ள ஒருசில ஏடிஎம்-களில் பலமணி நேரம் கால்கடுக்க நின்று பணம் எடுக்க வேண்டியுள்ளது. மத்திய அரசு இதுபோன்ற அறிவிப்புகளை வெளியிடுவதற்கு முன்பு மாற்று ஏற்பாடுகளை செய்திருக்க வேண்டும்” என்றார்.
பாரிமுனையைச் சேர்ந்த எஸ்.தனசேகர் என்பவர் கூறும் போது, “ஏடிஎம் மையங்களில் 2-வது நாளாக இன்றும் பணம் இல்லை. திறந்துள்ள ஒருசில ஏடிஎம்-களில் பலமணி நேரம் கால்கடுக்க நின்று பணம் எடுக்க வேண்டியுள்ளது. மத்திய அரசு இதுபோன்ற அறிவிப்புகளை வெளியிடுவதற்கு முன்பு மாற்று ஏற்பாடுகளை செய்திருக்க வேண்டும்” என்றார்.
கொடுங்கையூர், மூலக்கடை, ராயபுரம், தண்டையார்பேட்டை, வியாசர்பாடி, எம்கேபிநகர், வேப் பேரி, டவுட்டன் போன்ற பகுதிகளில் செயல்பட்டு வரும் வங்கிகளில் நேற்று வழக்கத்தை விட மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது.
அஞ்சல் நிலையங்கள் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமையும் இயங்கும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில். நேற்று பகல் 12 மணி அளவில், டெபாசிட் பெறு வது நிறுத்தப்பட்டது. வியாசர்பாடி, அண்ணா சாலையில் உள்ள தலைமை அஞ்சலgம் ஆகியவற் றில், பலர் திருப்பி அனுப்பப்பட்ட னர். இதனால் டெபாசிட் செய்ய வந்த பலர் அவதிக்குள்ளாயினர். பண பரிமாற்றம் மட்டும் தொடர்ந்து நடைபெற்று வந்தது. வங்கிகளைப் போல அஞ்சல கங்களும் முழுமையாக செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத் தனர். ரூபாய் நோட்டுகள் தட்டுப் பாடு காரணமாக சென்னை மாநக ரில் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.