சென்னை குடிநீர் வாரியத்தின் அனைத்து ஒப்பந்த குடிநீர் லாரிகளிலும் வேகக்கட்டுப்பாட்டு கருவி பொருத்தப்பட்டுள்ளதாக அவ்வாரியம் தெரிவித்துள்ளது.
கிண்டியில் கடந்த மாதம் 13-ம் தேதி சென்னை குடிநீர் வாரிய ஒப்பந்த லாரி மோதி, கல்லூரி மாணவிகள் 3 பேர் உயிரிழந்தனர். இது பொதுமக்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி யிருந்தது. அப்பொது ‘தி இந்து’ நாளிதழில், ‘அனைத்து குடிநீர் வாரிய ஒப்பந்த லாரிகளிலும் வேக கட்டுப்பாட்டு கருவி பொருத்த வேண்டும்’ என்று வலியுறுத்தி செய்தி வெளியிடப்பட்டிருந்தது.
அதனைத் தொடர்ந்து, குடிநீர் வாரியமும் உடனடியாக, ‘அனைத்து குடிநீர் ஒப்பந்த லாரி களிலும் வேகக் கட்டுப்பாட்டு கருவி பொருத்த வேண்டும். லாரிகள் வேகமாக இயக்கப்பட்டால் புகார் தெரிவிப்பதற்கான புகார் எண் களையும் லாரிகளின் பின்புறம் ஒட்ட வேண்டும்’ என்று உத்தரவிட்டிருந்தது.
அந்த உத்தரவு முறையாக அமல்படுத்தப்பட்டுள்ளதா? என சென்னை குடிநீர் வாரிய அதிகாரிகளிடம் கேட்டபோது, “சென்னை குடிநீர் வாரியத்தில் மொத்தம் 504 குடிநீர் ஒப்பந்த லாரி கள் இயக்கப்படுகின்றன. தற்போது அனைத்து லாரிகளிலும் வேகக் கட்டுப்பாட்டு கருவி பொருத்தப் பட்டுள்ளன. அவை அனைத்தும் மணிக்கு 30 கி.மீ வேகத்தில் மட் டுமே இயக்கப்படுகின்றன. அதை, அந்தந்த நீரேற்று நிலைய அதி காரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். வேகக் கட்டுப்பாட்டு கருவிகள் முறையாக இயங்கு கிறதா எனவும் கண்காணித்து வருகின்றனர். குடிநீர் லாரிகள் ஏதேனும் வேகமாக இயக்கப்படு வது தெரியவந்தால், அது தொடர் பாக பொதுமக்கள் புகார் அளிக் கலாம். அதற்கான புகார் எண்கள் அந்தந்த லாரிகளின் பின்புறம் குறிப்பிடப்பட்டுள்ளன” என்றார்.