கியூபாவை வளர்ச்சி அடைந்த நாடாக மாற்ற தனது வாழ்நாளை அர்ப்பணித்து, உலகிற்கே ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக வாழ்ந்தவர் காஸ்ட்ரோ என்று விஜயகாந்த் புகழஞ்சலி செலுத்தியுள்ளார்.
ஃபிடல் காஸ்ட்ரோ மறைவு குறித்து தேமுதிக தலைவர் விஜயகாந்த் வெளியிட்ட இரங்கல் செய்தியில், ''கியூபா முன்னாள் அதிபர் புரட்சியாளர் ஃபிடல் காஸ்ட்ரோவின் அகால மரணச் செய்தி கேட்டு அதிர்ச்சி அடைந்தேன். தியாக உணர்வோடு புரட்சிப் பாதையில் கியூபா நாட்டை சுதந்திரம் அடையச் செய்தவர்.
வளர்ச்சி அடைந்த நாடாக மாற்ற தனது வாழ்நாளை அர்ப்பணித்து, உலகிற்கே ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக வாழ்ந்தவர் காஸ்ட்ரோ.
தள்ளாத வயதிலும் நாட்டுக்காக தனது உழைப்பை அர்ப்பணித்த மாபெரும் தலைவர் ஃபிடல் காஸ்ட்ரோவின் ஆன்மா சாந்தியடைய வேண்டுகிறேன்'' என்று விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.