தமிழகம்

டெல்லி பொருட்காட்சியில் தமிழ்நாடு விழா: அமைச்சர் கடம்பூர் ராஜூ தொடங்கி வைத்தார்

செய்திப்பிரிவு

டெல்லி பிரகதி மைதானத்தில் 36-வது இந்திய பன்னாட்டு வர்த்தகப் பொருட்காட்சி நவம்பர் 14-ம் தேதி தொடங்கப்பட்டது. 27-ம் தேதி வரை நடக்கும் இந்த பொருட்காட்சியில் 27 மாநிலங்கள், 4 யூனியன் பிரதேசங்கள், வெளி நாடுகள், அரசு நிறுவனங்கள் மற்றும் தனியார் நிறுவனங்கள் பங்கேற்றுள்ளன.

இந்தப் பொருட்காட்சியில் தமிழக அரசு சார்பில், செய்தித்துறை, தமிழ்நாடு அரசு கேபிள்டிவி நிறுவனம், மின் ஆளுமை முகமை, மின்னணு நிறுவனம், சுற்றுலாத்துறை, தொழில் மற்றும் வணிகத்துறை, தமிழ்நாடு தொழில்வளர்ச்சி நிறுவனம், மகளிர் மேம்பாட்டு கழகம், வேளாண்மைத் துறை உள்ளிட்ட 14 அரசு துறைகள் பங்கேற்றுள்ன. இந்த அரங்குகளில் அரசின் சாதனை விளக்க படக் காட்சிகள் தொடர்ந்து ஒளிபரப்பப்படுகின்றன.

இந்திய பன்னாட்டு வர்த்தகப் பொருட்காட்சியில் பங்கேற்கும் அனைத்து மாநிலங்களும் தங்கள் மாநில நாள் விழாவை கொண்டாடி வருகின்றன.

அந்த வகையில் தமிழ்நாடு நாள் விழா பிரகதி மைதானத்தில் உள்ள ‘லால் சவுக்’ கலையரங்கில் நடந்தது. இதை தமிழக செய்தித்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில், செய்தித்துறை செயலர் இரா.வெங்கடேசன், டெல்லி தமிழ்நாடு இல்லத்தின் முதன்மை உள்ளுறை ஆணையர் ஜஸ்பீர் சி்ங் பஜாஜ், எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியன் எம்பி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

SCROLL FOR NEXT