சென்னை: மருத்துவ படிப்புகளுக்கான ஆன்லைன் கலந்தாய்வு நாளை மறுநாள் அக்டோபர் 19 ஆம் தேதி தொடங்கிறது.
மருத்துவப் படிப்புகளுக்கான தரவரிசை பட்டியல் இன்று (அக்.17) வெளியிடப்பட்டது. இந்நிலையில் மருத்துவப் படிப்பு மற்றும் பல் மருத்துவப் படிப்பிற்கான கலந்தாய்வு19 ஆம் தேதி தொடங்குகிறது.
அக் 19 ஆம் தேதி முதல் நாளில் விளையாட்டு வீரர்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் முன்னாள் ராணுவப் பிரிவினர் ஆகிய மூன்று பிரிவினருக்கான கலந்தாய்வு நடைபெறுகிறது. 20ம் தேதி அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் அரசு ஒதுக்கீட்டில் உள்ள சுயநிதி மருத்துவக் கல்லூரிகளுக்கான 7.5% இடஒதுக்கீட்டிற்கான கலந்தாய்வு நடைபெறுகிறது.
19ம் தேதி முதல் 20ம் தேதி வரை சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு நேரடியாகவும், பொது பிரிவினருக்கான கலந்தாய்வு இணையவழியாகவும், 21ம் தேதி முதல் 27ம் தேதி வரை சுயநிதி நிர்வாக ஒதுக்குட்டிற்கான கலந்தாய்வு இணையவழியாகவும் நடத்தப்படுகிறது. 26ம் தேதி முதல் சுற்று முடிவுகள் வெளியிடப்படும். 27 மற்றும் 28ம் தேதி வரை சான்றிதழ் சரிபார்க்கும் பணி நடைபெறும் 30ம் தேதி அன்று முதல் சுற்றின் இறுதி முடிவுகள் இணையவழியாக வெளியிடப்படும். முதல் சுற்றின் முடிவுகளின்படி, மருத்துவம் மற்றும் பல் மருத்துவப் படிப்பில் சேர்வதற்கான இறுதி நாள் நவம்பர் 4ம் தேதி ஆகும்.
இதனை தொடர்ந்து 2வது சுற்று கலந்தாய்வு நவம்பர் 7முதல் 14 வரை நடத்தப்பட்டும். இந்த 2 வது சுற்றின் முடிவுகள் 15ம் தேதி வெளியிடப்படும். 2வது சுற்றில் தேர்வானவர்கள் சேர்வதற்கு இறுதி நாள் 21ம் தேதி. முழுமைப் சுற்று (Mopup Counselling) டிசம்பர் 6ம் தேதி முதல் டிசம்பர் 12ம் தேதி வரை நடைபெறும். இந்த முழுமைச் சுற்றில் சேர்வதற்கு இறுதி நாள் டிசம்பர் 16ம் தேதி ஆகும். விடுபட்ட காலியிடங்களுக்கான இறுதிச் சுற்று டிசம்பர் 17ம் தேதி நடைபெறும். இந்த விடுபட்ட காலியிடங்களில் சேர்வதற்கு இறுதி நாள் டிசம்பர் 20ம் தேதி ஆகும்.