சென்னையில் நேற்று ஒரே நாளில் 17 பேர் குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டனர்.
சென்னை பெருநகரில் குற்றச் சம்பவங்களில் ஈடுபடும் குற்றவாளிகளைக் கண்டுபிடித்து கைது செய்யவும், குற்றச் செயல்கள் நடக்காமல் தடுக்கவும் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சென்னை பெருநகர காவல் ஆணையாளர் எஸ்.ஜார்ஜ் உத்தரவின்பேரில், தொடர்ந்து குற்றச் செயல்களில் ஈடுபடும் நபர்கள் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில், சென்னையில் நேற்று ஒரே நாளில் தொடர் குற்றச் செயல்களில் ஈடுபட்ட 17 பேர் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர். தொடர் குற்றப் பின்னணி கொண்ட, திருட்டு மற்றும் செயின் பறிப்பு சம்பவங்களில் தொடர்புடைய சதீஷ் (35), சரத்குமார் (22), பரந்தாமன் (26), செல்வகுமார் (24), பவன்ராய் (25), மோகன்ராய் (28), ஆசிப் (24), பிரகாஷ் (24), சேதுராஜ் (43), சரவணன் (29), டோனிராஜ் (27), விஜயகுமார் (22), ஜெயப்பிரகாஷ் (22), ராஜேஷ்குமார் (23), லாரன்ஸ் (44), செல்வகுமார் (39), பாபு (31) ஆகிய 17 பேர் நேற்று குண்டர் தடுப்புக்காவல் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டனர்.