ஆம்பூர் அடுத்த பச்சக்குப்பம் தரைப்பாலத்தை மூழ்கியபடி செல்லும் மழைநீரில் ஆபத்தை உணராமல் கடந்து செல்லும் வாகன ஓட்டிகள். 
தமிழகம்

திருப்பத்தூரில் கனமழையால் பச்சக்குப்பம் தரைப்பாலம் மூழ்கியது: 40+ கிராம மக்கள் பரிதவிப்பு

செய்திப்பிரிவு

திருப்பத்தூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் பெய்த கனமழை யால் பச்சக்குப்பம் தரைப் பாலம் மூழ்கியபடி வெள்ளநீர் பெருக் கெடுத்து ஓடுகிறது.

திருப்பத்தூர் மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக அவ்வப்போது கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக, வாணியம்பாடி, அம்பலூர், உதயேந்திரம், ஆம்பூர், நாட்றாம்பள்ளி ஆகிய பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை நேற்று முன்தினம் பெய்தது.

கனமழையால் தாழ்வானப் பகுதிகளில் மழை வெள்ளம் சூழ்ந்துள்ளது. தமிழக–ஆந்திர எல்லைப்பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழையால் புல்லூர் தடுப்பணை முழு கொள்ளளவை எட்டி உபரி நீர் வெளியேறி வருகிறது.இதனால், வாணியம்பாடி பாலாற் றுப்பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மாவட்டம் முழுவதும் பெய்து வரும் தொடர் மழையால் நீர்நிலைகள் வேகமாக நிரம்பி வருகின்றன.

பொதுப்பணித்துறை கட்டுப் பாட்டில் உள்ள 49 ஏரிகளில் 25-க்கும் மேற்பட்ட ஏரிகள் நிரம்பி யுள்ளன. ஆம்பூரில் பெய்த கனமழையால் பச்சக்குப்பம் தரைப்பாலம் மூழ்கியபடி மழை வெள்ளம் சீறிப்பாய்ந்து செல்கிறது.

இந்த தரைப்பாலத்தை கடந்து குடியாத்தம், பேரணாம்பட்டு, மேல்பட்டி மற்றும் அதைச் சுற்றியுள்ள 40-க்கும் மேற்பட்ட கிராமமக்கள் சென்று வருகின்றனர். தரைப்பாலம் மூழ்கியதால் 40-க்கும் மேற்பட்ட கிராமமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதையறிந்த ஆம்பூர் கிராமிய காவல் துறையினர் பச்சக்குப்பம் பாலாற்றுக்கு செல்லும் வழியில் தடுப்புகளை அமைத்து அவ்வழியாக வரும் வாகனங்களை மாற்று வழியில் செல்ல அறிவுறுத்தி வருகின்றனர்.

மழைக் காலங்களில் பெரும் பாலான தரைப்பாலங்கள் மூழ்குவதால் போக்குவரத்து துண்டிக்கப் படும் போது பொதுமக்கள் மேம் பாலம் அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

திருப்பத்தூர் மாவட்டத்தில் பெய்து வரும் கனமழையால் நீர்நிலைகள் வேகமாக நிரம்பி வருவதால் விவசாயி களும், பொதுமக்களும் மகிழ்ச்சி யடைந்துள்ளனர். நேற்று காலை 8 மணி நிலவரப்படி மாவட்டத்தில் பதிவான மழையளவு விவரம்:

ஆம்பூர் 2.4 மி.மீ,, வடபுதுப்பட்டு 20.6, ஆலங்காயம் 18, வாணியம்பாடி 3, நாட்றாம்பள்ளி 5.2, கேத்தாண்டப்பட்டி 3, திருப்பத்தூர் 9 மி.மீ., என மாவட்டம் முழுவதும் 61.20 மி.மீ., அளவுக்கு மழை பெய்துள்ளது.

SCROLL FOR NEXT