நாகர்கோவில் அருகே உள்ள பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அலுவலகங்களுக்கு போலீஸார் நேற்று சீல் வைத்தனர்.
நாகர்கோவில் டிஎஸ்பி நவீன்குமார் தலைமையில் இளங்கடையில் உள்ள பிஎஃப்ஐ தலைமை அலுவலகத்தில் போலீஸார் குவிக்கப்பட்டனர். அகஸ்தீஸ்வரம் வட்டாட்சியர் சேகர் உட்பட வருவாய்த்துறை அலுவலர்கள் அந்த அலுவலகத்துக்கு சீல் வைத்து, அதற்கான நோட்டீஸை ஒட்டினர்.
இதேபோன்று, நாகர்கோவிலை அடுத்த வடக்கு சூரங்குடியில் உள்ள பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா கிளை அலுவலகத்துக்கும் போலீஸ் பாதுகாப்புடன் அதிகாரிகள் சீல் வைத்தனர்.
அசம்பாவிதங்களைத் தடுக்கும் வகையில் அப்பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.