போதையில் மகளிர் விடுதிக்குள் அத்துமீறி நுழைந்து, துணை நடிகை மற்றும் பெண்களிடம் தவறாக நடந்துகொண்ட உதவி ஆய்வாளர், போலீஸ்காரர் நிரந்தர பணிநீக்கம் செய்யப்பட்டனர்.
சென்னை விருகம்பாக்கம் அபிராமி நகரில் ஒரு தொண்டு நிறுவனத்தின் முதியோர் இல்லம், மகளிர் விடுதி அருகருகே உள்ளன. கடந்த 2013 பிப்ரவரி 3-ம் தேதி இரவு விருகம்பாக்கம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் ஜோஸ்வா, தலைமைக் காவலர் ராஜா, போலீஸார் குமரேசன், குமரன் ஆகிய 4 பேரும் மகளிர் விடுதிக்குள் நுழைந்துள்ளனர்.
போதையில் இருந்த அவர்கள், ‘இங்கு பாலியல் தொழில் நடப்ப தாக தகவல் வந்துள்ளது. இது குறித்து விசாரிக்க வந்துள்ளோம்’ என்று கூறி அங்கிருந்த பெண்களி டம் தவறாக நடந்துள்ளனர். பின்னர் 2 பெண்களை தனியாக அழைத்துச் சென்று விசாரணை என்ற பெயரில் பாலியல் தொல்லை கொடுத்துள்ளனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த ஒரு பெண்ணை தாக்கி னர். விடுதியில் தங்கியிருந்த துணை நடிகையிடம் பாலியல் வன்முறை யிலும் ஈடுபட்டுள்ளனர். இதனால் உடல்நலம் பாதிக்கப்பட்ட அந்த நடிகை, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார்.
இதுகுறித்து தொண்டு நிறுவன உரிமையாளர் ஆஷா, விருகம் பாக்கம் காவல் நிலையத்திலும், சென்னை பெருநகர காவல் ஆணை யரக அலுவலகத்திலும் புகார் கொடுத்தார். தலைமைக் காவலர் ராஜா, போலீஸ்காரர் குமரேசன் ஆகிய இருவரையும் உடனடியாக பணி இடைநீக்கம் செய்து காவல் ஆணையர் எஸ்.ஜார்ஜ் உத்தரவிட் டார். மேலும், சம்பவம் குறித்து விசா ரணை நடத்த, வடபழனியில் உதவி ஆணையராக இருந்த சுப்புராஜன் தலைமையில் குழு அமைக்கப்பட் டது. உதவி ஆய்வாளர் ஜோஸ்வா, போலீஸ்காரர் குமரன் ஆகியோர் மகளிர் விடுதிக்குள் புகுந்து தவறாக நடந்துகொண்டது விசா ரணையில் உறுதிசெய்யப்பட்டிருப் பதாக விசாரணைக் குழு அறிக்கையில் கூறப்பட்டது.
இதைத் தொடர்ந்து, தற்போது குரோம்பேட்டை போக்குவரத்து பிரிவு உதவி ஆய்வாளராக இருக்கும் ஜோஸ்வா, எம்ஜிஆர் நகர் காவல் நிலையத்தில் குற்றப்பிரிவு காவலராக இருக்கும் குமரன் ஆகியோரை நிரந்தரமாக பணிநீக்கம் (டிஸ்மிஸ்) செய்து சென்னை பெருநகர காவல் ஆணையாளர் எஸ்.ஜார்ஜ் நேற்று உத்தரவிட்டார்.