தமிழகம்

தங்கம் விலை பவுனுக்கு ரூ.320 குறைந்தது

செய்திப்பிரிவு

சர்வதேச அளவில் தங்கம் விலை குறைந்துள்ளதாலும், 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் வாபஸ் பெறப்பட்டுள்ளதாலும் உள்ளூரில் தங்கத்தின் விலை குறைந்து வருகிறது. சென்னையில் நேற்று தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.320 குறைந்து ரூ.23 ஆயிரத்து 360-க்கு விற்கப்பட்டது. 22 காரட் கொண்ட ஒரு கிராம் தங்கம் ரூ.2 ஆயிரத்து 920-க்கு விற்கப்பட்டது. இதுவே, நேற்று முன்தினம் ரூ.2 ஆயிரத்து 960க்கு விற்கப்பட்டது. ரூ.500, ரூ.1000 நோட்டுகளுக்கு திடீரென நெருக்கடி ஏற்பட்டதால் நாடுமுழுவதும் நகைக் கடைகளில் கூட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டது.

இது தொடர்பாக சென்னை தங்கம் மற்றும் வைர வியாபாரிகள் சங்க பொதுச் செயலாளர் எஸ்.சாந்தகுமார் கூறும்போது, “நாடு முழுவதும் 500, 1000 ரூபாய் நோட்டுகளுக்கு திடீரென நெருக்கடி ஏற்பட்டுள்ளதால் நகை வாங்குவது கடந்த சில நாட்களாக குறைந்து விட்டது. இருக்கும் பணத்தை கொண்டு மக்கள் அத்தியாவசிய பொருட்களை வாங்க முயல்கின்றனர். இதனால், தங்கம், வைர நகைகள் வாங்குவதை தள்ளிப்போட்டுள்ளனர். இதனால், உள்ளூரில் தங்கத்தின் தேவை திடீரென குறைந்துள்ளதால், விற்பனை கடுமையாக பாதித்துள்ளது’’ என்றார்.

SCROLL FOR NEXT