தமிழகம்

முன்நடத்தை சரியில்லாத வழக்கறிஞர்களை கண்டறிய பல்வேறு விவரங்களை பெற பார் கவுன்சிலுக்கு நீதிமன்றம் அறிவுரை

கி.மகாராஜன்

முன்நடத்தை சரியில்லாத வழக் கறிஞர்களை சுலபமாக கண்டறிய வக்காலத்து மட்டுமின்றி வக்காலத்தின் சான்றாவணம், ஓர் ஆண்டில் தாக்கல் செய்த பிரமாண பத்திரங்களின் விவரம் உள்ளிட்ட பல்வேறு விவரங்களை பார் கவுன்சில் பெற வேண்டும் என உயர் நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது.

மதுரை புதூர் முத்துராமலிங் கபுரத்தைச் சேர்ந்த பி.பேச்சிமுத்து உட்பட 11 பேர், தங்கள் மீது கோ.புதூர் போலீஸார் பதிவு செய்த வழக்கில் கைதாகாமல் இருக்க முன்ஜாமீன் கோரி உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்தனர்.

இந்த மனு உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, இதே மனுதாரர்கள் இதே வழக்கில் மாவட்ட நீதிமன்றத்திலும் முன் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்து, அந்த மனு நிலுவையில் இருப்பதாகவும், அந்த விவரங் களை மறைத்து இங்கு முன்ஜாமீன் மனு தாக்கல் செய்திருப்பதாகவும் அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதனை மனுதாரர் தரப்பு வழக் கறிஞர் மறுத்தார். விசாரணையில், மாவட்ட நீதிமன்றத்திலும் முன் ஜாமீன் மனு தாக்கல் செய்தது உறுதி செய்யப்பட்டது.

இந்த மனுவை விசாரித்து நீதிபதி எஸ்.வைத்தியநாதன் பிறப் பித்த உத்தரவு:

ஒரு வழக்கில் ஒரே மாதிரியான நிவாரணம் கோரி இரு வேறு நீதிமன்றங்களில் மனு தாக்கல் செய்வது எதிர்காலத்தில் தடுக் கப்பட வேண்டும். இந்த முறை தொடர்ந்தால் விசாரணை கடுமை யாக பாதிக்கப்படும். உயர் நீதிமன்ற முதல் அமர்வில் பணிபுரிந்தபோது நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் ஆஜரான மனுதாரர், தன் சார்பில் மனு தாக்கல் செய்த வழக்கறிஞரை நேரில் பார்த்ததில்லை என்றும், தனது சார்பில் வழக்கு தொடருமாறு அந்த வழக்கறிஞரிடம் தான் எப்போதும் தெரிவிக்கவில்லை என்றும் கூறினார். இதையடுத்து அந்த வழக்கறிஞரும் வழக்கில் சேர்க்கப்பட்டு, அவர் விளக்கம் அளிக்க நோட்டீஸ் அனுப்ப உத்தரவிடப்பட்டது.

அப்போது முதல் அமர்வு பொதுவான உத்தரவு ஒன்றை பிறப்பித்தது. அதில், இனிமேல் நீதிமன்றங்களில் தாக்கல் செய்யப்படும் முன்ஜாமீன் மனுக்களின் அனைத்து பக்கங்களிலும் மனு தாரரின் கையெழுத்து, மனுதாரர் சார்பில் ஆஜராகும் வழக்கறிஞரின் கையெழுத்து, இதை உறுதி செய்யும் வழக்கறிஞரின் கையெழுத் துகள் இடம்பெற வேண்டும்.

மேலும் பெரிய எழுத்துகளில் (கேபிட்டல் லெட்டர்ஸ்) வழக் கறிஞர்களின் கல்வித் தகுதி, பயின்ற கல்லூரி, பதிவு எண் மற்றும் செல்போன் எண்களையும் குறிப்பிட வேண்டும். இந்த முறையை அனைத்து நீதிமன்றங்களும் பின்பற்ற வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

பார் கவுன்சிலில் வழக்கறிஞராக பதிவு செய்த ஒருவர் அந்தத் தொழிலை செய்து வருகிறாரா, இல்லையா என்பதை அறிய ஒவ்வொரு ஆண்டும் வழக்கறிஞர் களிடம் இருந்து பார் கவுன்சில் வக்காலத்து பெற்று வருகிறது. இவ்வாறு வக்காலத்து மட்டும் வாங்குவது போதாது. வக்காலத் தின் சான்றாவணங்கள் அல்லது நீதிமன்றத்தில் ஓர் ஆண்டில் தாக்கல் செய்த பிரமாண பத்திரங்களின் விவரம், பயின்ற சட்டக் கல்லூரி, பதிவு எண், செல்போன் எண்கள் ஆகியவற்றையும் பெற வேண்டும்.

இந்த விபரங்களை பெறும்போது, முன்நடத்தை சரியில்லாத வழக்கறிஞர்களை பார் கவுன்சில் சுலபமாக அடையாளம் காண முடியும் என நீதிபதி உத்தரவில் தெரிவித் துள்ளார்.

SCROLL FOR NEXT