கோப்புப் படம் | தலைமைச் செயலகம் 
தமிழகம்

தமிழகத்தில் 6 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்

செய்திப்பிரிவு

சென்னை: தமிழகத்தில் 6 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் 6 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து உள்துறை செயலாளர் பனிந்தீர ரெட்டி உத்தரவிட்டுள்ளார்.

இதன்படி கோவை மாநகர சட்டம் ஒழுங்கு துணை ஆணையர் மாதவன், சைபர் கிரைம் பிரிவு எஸ்பியாகவும், சைபர் கிரைம் பிரிவு எஸ்பி அசோக் குமார், கோவை நகர போக்குவரத்து காவல் துணை ஆணையராகவும், கோவை நகர போக்குவரத்து காவல் துணை ஆணையர் மதிவாணன், கோவை நகர சட்டம் ஒழுங்கு துணை ஆணையராகவும், தமிழ்நாடு சிறப்பு காவல்படை 6வது பட்டாலியன் கமாண்டண்ட் புக்யா சினேகா பிரியா, மதுரை மண்டல குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு எஸ்.பி.,யாகவும், திருப்பூர் துணை ஆணையர் பாஸ்கரன் - தமிழ்நாடு சிறப்பு காவல்படை 6வது பட்டாலியன் கமாண்டன்ட் ஆகவும், தேனி உத்தமபாளைம் உதவி எஸ்பி ஸ்ரேயா குப்தா, விளாத்திகுளம் உதவி எஸ்.பி.,யாகவும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். மேலும், பயிற்சி முடித்த 9 ஐபிஎஸ் அதிகாரிகள் உதவி எஸ்.பி.,யாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

SCROLL FOR NEXT