திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி நேற்று வெளியிட்ட அறிக்கை:
காவிரி நதி நீர் பிரச்சினை யில் தமிழகம் தொடர்ந்து வஞ்சிக்கப்பட்டு வருகிறது. இதனால் தமிழகம் பாலைவன மாகும் பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. காவிரி நதிநீரைப் பெற ஆர்ப்பாட்டம், மறியல், பட்டினிப் போராட்டம், அனைத்துக் கட்சி கூட்டம் என பல வடிவங்களிலும் தமிழக மக்கள் போராடி வருகின்றனர்.
இந்த போராட்டங்களின் வரிசையில் தமிழ்நாடு அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங் கிணைப்புக் குழுத் தலைவர் பி.ஆர்.பாண்டியன் தலைமையில் விவசாய சங்கங்கள் தமிழகம் முழுவதும் ‘மக்கள் சந்திப்பு பிரச்சாரப் பயணம்’ மேற்கொள்ளவுள்ளனர். வரும் 5-ம் தேதி கன்னியாகுமரியில் தொடங்கி 11-ம் தேதி சென்னையில் இந்த பயணம் நிறைவு பெறுகிறது. இறுதியில் ஆளுநரை சந்திக்கவும் முடிவு செய்துள்ளனர்.