சென்னை: தமிழகத்தில் இலவச மின்சாரம், மானிய விலையில் மின்சாரம் பெறுபவர்கள் ஆதார் எண்ணை மின் நுகர்வோர் எண்ணுடன் இணைக்க வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் உத்தரவின்படி இலவசம், மானிய விலையில் மின்சாரம் பெறுபவர்கள் ஆதார் எண்ணை மின் நுகர்வோர் எண்ணுடன் இணைக்க வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இதன்படி 100 யூனிட் இலவச மின்சாரம் பெறுபவர்கள், விவசாயத்திற்கு இலவச மின்சாரம் பெறுபவர்கள், பொதுமக்கள் வழிபாட்டு தலங்களுக்கு இலவச மின்சாரம் பெறுபவர்கள், விசைத்தறிக்கு இலவச மின்சாரம் பெறுபவர்கள், கைத்தறிக்கு இலவச மின்சாரம் பெறுபவர்கள் என்று மானியம் மற்றும் இலவசமாக மின்சாரம் பெறுபவர்கள் ஆதார் எண்ணை மின் நுகர்வோர் எண்ணுடன் இணைக்க வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.