தமிழகம்

அதிமுக பொன்விழா ஆண்டு நிறைவு: அக். 17-ல் எம்ஜிஆர், ஜெ. சிலைகளுக்கு மரியாதை

செய்திப்பிரிவு

சென்னை: அதிமுக சார்பில் கட்சியின் பொன்விழா ஆண்டு நிறைவு விழா வரும் 17- தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளர் பழனிசாமி பங்கேற்று, முன்னாள் முதல்வர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோர் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்த உள்ளார்.

இதுதொடர்பாக அதிமுக தலைமை அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: எம்ஜிஆரால்தோற்றுவிட்டப்பட்ட அதிமுக, பொன் விழா ஆண்டை நிறைவுசெய்து, 17-ம் தேதி 51-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. இதை கொண்டாடும் வகையில் அன்று காலை 9 மணிக்கு சென்னை, ராயப்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள முன்னாள் முதல்வர் எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோர் உருவச் சிலைகளுக்கு, கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளர் பழனிசாமி மாலை அணிவித்து, கட்சி கொடியை ஏற்றி வைத்து, இனிப்பு வழங்க உள்ளார்.

SCROLL FOR NEXT