தமிழகம்

ரூபாய் நோட்டு தட்டுப்பாட்டை மத்திய அரசு போர்க்கால அடிப்படையில் தீர்க்க வேண்டும்: ஆர்ப்பாட்டத்தில் ஜி.கே.வாசன் வலியுறுத்தல்

செய்திப்பிரிவு

ரூபாய் நோட்டு தட்டுப்பாட்டை போர்க்கால அடிப்படையில் தீர்க்க வேண்டும் என்று தமாகா தலைவர் ஜி.கே.வாசன் கூறினார்.

500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்புக்கு பிறகு ஏற்பட்டுள்ள பிரச்சினை களை தீர்க்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி தமாகா சார்பில் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தப்பட் டது. இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று தமாகா தலைவர் ஜி.கே.வாசன் பேசியதாவது:

இந்தியாவில் சுதந்திரத்துக்கு பிறகு மிகப்பெரிய அளவில் பண ரீதியான பிரச்சினை தலை தூக்கியுள்ளது. 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகளை செல்லாது என்று அறிவித்த மத்திய அரசு, அதனால் ஏற்படப் போகிற பிரச்சினைகளைப் பற்றி சிந்திக் கவில்லை. என்னென்ன பிரச்சினை கள் எழும் என்பதை கணக்கில் கொண்டு முன் கூட்டியே அவற்றை போக்குவதற்கான திட்டங்களை வகுத்திருக்க வேண்டும். ஆனால், மத்திய அரசு அதை செய்ய தவறிவிட்டது. ஏழை, எளிய மக்கள் உழைத்து சம்பாதித்த பணத்தை எடுப்பதற்காக வங்கி களில் நீண்ட வரிசைகளில் நிற்கின் றனர். ஆனால், பெரு முதலாளி களுக்கு மட்டும் எளிதில் பணம் கிடைக்கிறது. இது மிகவும் கண்டிக்கத்தக்கது.

மத்திய அரசு தற்போது எழுந் துள்ள அசாதாரண சூழலை போக்க 10, 20, 50, 100 ரூபாய் நோட்டுகளையும் புதிய 500 மற்றும் 2000 ரூபாய் நோட்டுகளையும் அதிகளவில் புழக்கத்தில் விட வேண்டும். முக்கியமாக ரூபாய் நோட்டு தட்டுப்பாட்டை போர்க்கால அடிப்படையில் தீர்க்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் தமாகா துணைத் தலைவர்கள் ஞானதேசிகன், கோவை தங்கம், மாநில பொதுச் செயலாளர் விடியல் சேகர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

SCROLL FOR NEXT