எஸ்ஆர்எம்யு துணைப் பொதுச் செயலாளர் உட்பட ரயில் டிக்கெட் பரிசோதகர்கள் 13 பேர் நேற்று பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.
தவறான அறிக்கை அளித்து பயணப்படி பெற்ற குற்றச்சாட்டின் கீழ், இந்த பணியிடை நீக்க நட வடிக்கையை ரயில்வே நிர்வாகம் எடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.
பணியிடை நீக்கம் செய்யப்பட்ட வர்கள் விவரம்:
எஸ்ஆர்எம்யு துணைப் பொதுச் செயலாளர் வீரசேகரன், ரவி, நசீர் அகமது, ஜெர்மியா, துரைராஜ், முருகானந்தம், தாமரைச்செல்வன், மனோகர், ஜெயராஜ், பெரியண் ணன், ராஜா, அந்தோணிசாமி, அப்துல் சிராஜூதீன்.
இவர்களில் ஜெயராஜ், ராஜா ஆகியோர் விழுப்புரத்திலும், துரை ராஜ், தாமரைச்செல்வன் ஆகியோர் தஞ்சாவூரிலும், எஞ்சியவர்கள் திருச்சியிலும் பணியாற்றி வரு கின்றனர்.