கோப்புப்படம் 
தமிழகம்

ஆளுநர் ஆர்.என்.ரவியின் மனைவிக்கு உடல்நல பாதிப்பு: தனியார் மருத்துவமனையில் அனுமதி

செய்திப்பிரிவு

சென்னை: தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியின் மனைவி லட்சுமிக்கு ஏற்பட்ட திடீர் உடல்நல பாதிப்பு காரணமாக சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

தமிழக ஆளுநரான ஆர்.என்.ரவியின் மனைவி லட்சுமி ரவி காய்ச்சல் மற்றும் செரிமான பிரச்சினை காரணமாக உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவர், சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார்.

தனியார் மருத்துவமனையில், மருத்துவர்கள் அடங்கிய குழுவினர் ஆளுநரின் மனைவி லட்சுமிக்கு தொடர் சிகிச்சைகளை வழங்கி வருகின்றனர். தொடர்ந்து ஓய்வில் இருக்கும் அவர் விரைவில் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT