சென்னை: கோடநாடு வழக்கு ஆவணங்களை பெற்றுக்கொண்ட சிபிசிஐடிபோலீஸார் விரைவில் விசாரணையை தொடங்குகின்றனர். மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கோடநாடு எஸ்டேட்டில் கடந்த 2017-ம் ஆண்டு நடந்த கொலை, கொள்ளை சம்பவங்கள் பரபரப்பைஏற்படுத்தின. உதகை மாவட்டநீதிமன்றத்தில் நடந்த வழக்கு விசாரணை இறுதிகட்டத்தை நெருங்கும்நிலையில், தமிழகத்தில் ஆட்சி மாறியது. பிறகு, வழக்கில் மறுவிசாரணை நடந்து வருகிறது.சசிகலா, முன்னாள் எம்எல்ஏ ஆறுகுட்டி உட்பட பலரிடம் மேற்கு மண்டல ஐ.ஜி. சுதாகர் தலைமையிலான தனிப்படையினர் விசாரணை நடத்தினர்.
இந்த வழக்கை கடந்த மாதம்சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றிடிஜிபி சைலேந்திர பாபு உத்தரவிட்டார். சிபிசிஐடி டிஜிபி முகமது ஷகில் அக்தரும் சமீபத்தில்டிஜிபி சைலேந்திர பாபுவை சந்தித்து, ஆலோசனை நடத்தினார்.
இதுவரை 316 பேரிடம் தனிப்படை போலீஸார் விசாரணைநடத்திய நிலையில், அதுதொடர்பான வாக்குமூலம், விசாரணை ஆவணங்களை உதகையில் மாவட்ட நீதிபதி முருகனிடம், மாவட்ட கூடுதல் கண்காணிப்பாளர் கிருஷ்ணமூர்த்தி நேற்று முன்தினம்ஒப்படைத்தார். நீலகிரி எஸ்.பி.அலுவலகத்தில் இருந்து, விசாரணை ஆவணங்களை சிபிசிஐடிபோலீஸார் நேற்று பெற்றனர்.விரைவில் முழு வீச்சில் விசாரணையை தொடங்க உள்ளனர்.