சென்னை: இரண்டாம் அரையாண்டுக்கான சொத்துவரியை சொத்து உரிமையாளர்கள் வருகிற 15-ம் தேதிக்குள் செலுத்தி5 சதவீதம் ஊக்கத் தொகையைப்பெறலாம் என்று சென்னை மாநகராட்சிதெரிவித்துள்ளது.
இது தொடர்பாக, சென்னை மாநகராட்சியின் சார்பில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள சொத்துஉரிமையாளர்கள் 2022-23-ம் நிதியாண்டின் முதல் அரையாண்டுக்கான சொத்து வரியை கடந்த செப்டம்பர் 30-ம் தேதிக்குள் செலுத்த வேண்டும். அதன்படி, 2022-23-ம் நிதியாண்டின் முதல் அரையாண்டுக்கான சொத்து வரியில் ரூ.696.97 கோடி சொத்து உரிமையாளர்களிடமிருந்து வசூல் செய்யப்பட்டுள்ளது.
முதல் அரையாண்டுக்கான சொத்துவரி செலுத்த வேண்டிய இறுதிநாளான கடந்த மாதம் 30-ம் தேதி மட்டும் ரூ.55.30 கோடி வசூல் செய்யப்பட்டுள்ளது. சொத்துவரி செலுத்த வேண்டியஒவ்வோர் அரையாண்டின் தொடக்கத்திலும் முதல் 15 தினங்களுக்குள் சொத்துவரி செலுத்தும் சொத்து உரிமையாளர்களுக்கு, அவர்கள் செலுத்தும் சொத்து வரியில் 5 சதவீதம்அல்லது அதிகபட்சமாக ரூ.5,000 ஊக்கத் தொகையாக வழங்கப்பட்டு வருகிறது.
கடந்த 1-ம் தேதி முதல் 10-ம்தேதி வரை 10 நாட்களில் சென்னைமாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள 13 லட்சம் சொத்து உரிமையாளர்களில் சுமார் 4 லட்சம் சொத்து உரிமையாளர்களிடமிருந்து, இரண்டாம் அரையாண்டுக்கான சொத்துவரி ரூ.50.16 கோடி வசூலிக்கப்பட்டுள்ளது. இதுவரை சொத்துவரி செலுத்திய சொத்து உரிமையாளர்களுக்கு ரூ.1.25 கோடி ஊக்கத்தொகையாக அளிக்கப்பட்டுள்ளது. சொத்து உரிமையாளர்கள் சென்னைமாநகராட்சி வருவாய் அலுவலரின் பெயரில் காசோலைகள், வரைவோலைகள், கடன் பற்று அட்டை மூலமாக சென்னை மாநகராட்சியின் வரி வசூலிப்பவர்களிடம் செலுத்தி, செலுத்தப்பட்டதற்கான வரிசீட்டை பெற்றுக் கொள்ளலாம்.
சென்னை மாநகராட்சியால் வழங்கப்படும் சொத்துவரி ரசீதுகளில் உள்ளக்யூஆர் குறியீட்டை பயன்படுத்தியும்சொத்துவரியைச் செலுத்தலாம். சென்னை மாநகராட்சியின் இணையதளம் (www.chennaicorporation.gov.in)மூலமாக, எவ்வித பரிமாற்ற கட்டணமுமில்லாமல் சொத்துவரி செலுத்தலாம். தேர்ந்தெடுக்கப்பட்ட வங்கிகளின் மூலம் நேரடியாகபணமாகவும் சொத்து வரியை செலுத்தலாம். 'நம்ம சென்னை’ மற்றும் ‘பேடிஎம்’முதலிய கைபேசி செயலி மூலமாகவும் செலுத்தலாம். பிபிபிஎஸ்(BBPS) மூலமாகவும் சொத்துவரி செலுத்தலாம். சொத்து உரிமையாளர்கள் வருகிற15-ம் தேதிக்குள் தங்களின் இரண்டாம் அரையாண்டுக்கான சொத்துவரியைச் செலுத்தி 5 சதவீதம்ஊக்கத்தொகையை பெற்றுப் பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.