சென்னை: சென்னை ராமாவரத்தில் நடக்கும் அதிமுக பொன்விழா நிகழ்ச்சியில் வி.கே.சசிகலா பங்கேற்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: சென்னை ராமாவரத்தில் வரும் 17-ம் தேதி பிற்பகல் 2 மணிக்கு நடைபெறும் அதிமுக பொன்விழாவில் வி.கே.சசிகலா பங்கேற்கிறார். மறைந்த முன்னாள் முதல்வர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதாவின் படங்களுக்கு அவர் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்துகிறார். கட்சியின் பேச்சாளர்கள், மூத்த முன்னோடிகள், கலைக் குழுவை சேர்ந்தவர்கள் உள்ளிட்டோரை கவுரவித்து, நலத்திட்ட உதவிகளையும் அவர் வழங்க உள்ளார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.