சென்னை சாஸ்திரி நகரில் உள்ள வங்கியில் இருந்து வங்கி அதிகாரிகள் துணையுடன் ரூ.500, 1000 நோட்டுகளை முறைகேடாக மீனம்பாக்கத்தில் உள்ள மற்றொரு வங்கி அதிகாரி மூலம் மாற்ற முயற்சி செய்தபோது காரில் கொண்டு வரப்பட்ட ரூ.25 லட்சம் பணத்தை மர்ம கும்பல் ஒன்று பல்லாவரம் அருகே கொள்ளையடித்து சென்றது.
இந்த சம்பவம் தொடர்பாக சாஸ்திரி நகர் போலீஸார் வழக்கு பதிவு செய்து வங்கி ஊழியர்கள் மற்றும் கொள்ளையில் தொடர்புடையவர்களை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்த வழக்கில் போலீஸாரால் தேடப்பட்ட முக்கிய குற்றவாளி பல்லாவரத்தை அடுத்த பொழிச் சலூரை சேர்ந்த ராஜேஷ் என்ற தினேஷ் பாபு நேற்று தாம்பரம் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் மாஜிஸ்திரேட் உமாமகேஸ்வரி முன்பு சரண் அடைந்தார்.