டிடிவி தினகரன் | கோப்புப் படம் 
தமிழகம்

அரசின் சார்பு நிறுவன ஊழியர்களுக்கு உடனே தீபாவளி போனஸ் அறிவிப்பீர்: தினகரன்

செய்திப்பிரிவு

சென்னை: “போக்குவரத்துக் கழகம் உள்ளிட்ட அரசின் சார்பு நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கான தீபாவளி போனஸ் அறிவிக்க வேண்டும்” என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து இன்று அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "போக்குவரத்துக் கழகம், மின்சார வாரியம், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் உள்ளிட்ட தமிழக அரசின் சார்பு நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கான தீபாவளி போனஸ் உடனடியாக அறிவிக்கப்பட வேண்டும்.

கரோனாவைக் காரணம் காட்டி கடந்த ஆண்டுகளில் 10 சதவீதமாக குறைக்கப்பட்ட போனஸை முன்பிருந்ததைப் போல் 20 சதவீதமாக இந்த ஆண்டு வழங்க வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துகிறேன்" என்று தினகரன் கூறியுள்ளார்.

SCROLL FOR NEXT