தமிழகம்

கோடநாடு வழக்கு விசாரணை அறிக்கை நீதிபதியிடம் சமர்ப்பிப்பு

செய்திப்பிரிவு

உதகை: கோடநாடு கொலை மற்றும் கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டதாக சயான், வாளையாறு மனோஜ் உட்பட கேரளாவை சேர்ந்த 10 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கு, 4 ஆண்டுகளுக்கும் மேலாக உதகையிலுள்ள மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், கடந்த ஆண்டு ஆகஸ்ட் முதல் ஐஜி சுதாகர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு, மீண்டும் போலீஸ் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. போலீஸார் நீலகிரி மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜராகி, விசாரணை குறித்து நீதிபதியிடம் தெரிவித்து வந்தனர். இந்நிலையில், வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டு உள்ளது. இதனால், தனிப்படை போலீஸாரின் விசாரணை தொடர்பான ஆவணங்களை, மாவட்ட நீதிபதியிடம் கூடுதல் எஸ்பி கிருஷ்ணமூர்த்தி நேற்று சமர்ப்பித்தார்.

SCROLL FOR NEXT