தமிழகம்

ஆப்பிரிக்கன் கெளுத்தி மீன்கள் நத்தமேடு கிராமத்தில் அழிப்பு

செய்திப்பிரிவு

தருமபுரி மாவட்டம் கடத்தூர் அடுத்த நத்தமேடு பகுதியில் மத்திய, மாநில அரசுகளால் தடை செய்யப்பட்ட ஆப்பிரிக்கன் கெளுத்தி வகை மீன்கள் வளர்க்கப் படுவதாக மீன்வளத்துறை மற்றும் வருவாய்த் துறைக்கு தகவல் வந்துள்ளது.

இதையடுத்து, மீன் வளர்ப்பு ஆய்வாளர் சங்கர் தலைமையில் மீன் பண்ணைக் குட்டையை ஆய்வு செய்தனர். இதில் தடை செய்யப்பட்ட ஆப்பிரிக்கன் கெளுத்தி வகை மீன்கள் வளர்ப்பது உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து, பண்ணைக் குட்டையில் உள்ள தண்ணீர் முழுவதையும் வடித்த பிறகு வாகனங்கள் மூலம் ஆப்பிரிக்கன் கெளுத்தி மீன்களை அள்ளி குழி தோண்டி மூடி அழித்தனர்.

மேலும் இதுபோன்று தடை செய்யப்பட்ட மீன்களை வளர்த்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர்.

SCROLL FOR NEXT