நந்திவரம் - கூடுவாஞ்சேரியில் பொதுப் பிரச்சினைகள் மீது நடவடிக்கை எடுக்கும் வகையில் உருவாக்கப்பட்ட ‘நம்ம நந்திவரம் - கூடுவாஞ்சேரி’ என்ற செயலியை அமைச்சர் தா.மோ.அன்பரசன் தொடங்கி வைத்தார். 
தமிழகம்

நந்திவரம் | பொதுமக்கள் பிரச்சினைகளுக்கு தீர்வு காண தனியாக புதிய செயலி: அமைச்சர் தா.மோ.அன்பரசன் தொடங்கி வைத்தார்

செய்திப்பிரிவு

நந்திவரம்: ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ் சார்பில் நடந்த ‘உங்கள் குரல் - தெரு விழா’ நிகழ்ச்சியில் நகராட்சித் தலைவர் எம்.கே.டி.கார்த்திக் தெரிவித்தது போல் 'நம்ம நந்திவரம் - கூடுவாஞ்சேரி' என்ற புதிய செயலி (APP) தொடங்கப்பட்டுள்ளது.

பொதுமக்கள் தாங்கள் வாழும் பகுதியில் நிலவும் பொதுப் பிரச்சினைகள் தொடர்பாக, அந்தந்த பகுதி உள்ளாட்சி பிரதிநிதிகளின் கவனத்துக்கு கொண்டு சென்று, அவற்றுக்கு தீர்வு காண வாய்ப்பு ஏற்படுத்தி தரும் வகையில், ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ் ‘உங்கள் குரல் - தெரு விழா’ என்ற நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தது. அதன்படி, செங்கல்பட்டு மாவட்டம் நந்திவரம் - கூடுவாஞ்சேரி நகராட்சியில் ‘உங்கள் குரல் - தெருவிழா’ நிகழ்ச்சி கடந்த மே மாதம் நடந்தது. இதில் நகராட்சித் தலைவர் எம்.கே.டி.கார்த்திக், துணைத் தலைவர் ஜி.கே.லோகநாதன், ஆணையர் இளம்பரிதி மற்றும் கவுன்சிலர்கள், குடியிருப்போர் நலச்சங்க நிர்வாகிகள், பொதுமக்கள் என ஏராளமானோர் பங்கேற்றனர்.

அப்போது பேசிய நகர்மன்றத் தலைவர் மக்களின் குறைகளை தீர்க்கவும், ஆலோசனை பெறவும் ‘நம்ம நந்திவரம் - கூடுவாஞ்சேரி’ என்ற புதிய செயலியை (app) உருவாக்க உள்ளோம் என தெரிவித்தார். அதன்படி நேற்று கூடுவாஞ்சேரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அமைச்சர் தா.மோ.அன்பரசன் பங்கேற்று புதிய செயலியை தொடங்கிவைத்தார். இந்த நிகழ்ச்சியில் எம்.பி. செல்வம், செங்கை எம்எல்ஏவரலட்சுமி, நகராட்சி துணை தலைவர் ஜி.கே.லோகநாதன் மற்றும் நகராட்சி உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

SCROLL FOR NEXT