தமிழகம்

ராமேசுவரம் - மதுரை சிறப்பு ரயில் முன்பதிவில்லாத ரயிலாக மாற்றம்

செய்திப்பிரிவு

பயணிகளின் வசதிக்காக ராமேசுவரம்-மதுரை இடையே கூடுதலாக வாரம் மும்முறை சிறப்புக் கட்டண ரயில் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த ரயில் நேற்று முதல் இயக்கப்படுகிறது. பயணிகள் வசதிக்காக இந்த ரயில் இனிமேல் முன்பதிவு இல்லாத சிறப்பு ரயிலாக இயக்கப்படும்.

இந்த ரயிலுக்கு வழக்கமான கட்டணமான ராமேசுவரம்-மதுரைக்கு ரூ.70, ராமநாதபுரத்தில் இருந்து மதுரைக்கு ரூ.55, பரமக்குடியில் இருந்து மதுரைக்கு ரூ.45, மானாமதுரையில் இருந்து மதுரைக்கு ரூ.30 என வசூலிக்கப்படும்.

இத்தகவலை மதுரை ரயில்வே கோட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

SCROLL FOR NEXT