தமிழகம்

3 தொகுதி தேர்தல்: இன்று பிரச்சாரம் தொடங்குகிறார் மு.க.ஸ்டாலின்

செய்திப்பிரிவு

வரும் 19-ம் தேதி நடைபெறும் 3 தொகுதி தேர்தலுக்கான பிரச்சாரத்தை திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்குகிறார்.

தஞ்சாவூர், அரவக்குறிச்சி, திருப்பரங் குன்றம் மற்றும் புதுச்சேரி நெல்லித்தோப்பு ஆகிய தொகுதிகளில் வரும் 19-ம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. இத்தேர்தல் களத்தில் அதிமுக, திமுக, தேமுதிக, பாமக, பாஜக, நாம் தமிழர் கட்சி என பல கட்சிகள் இருந்தாலும் அதிமுக - திமுக இடையே நேரடிப் போட்டி நிலவுகிறது.

அதிமுக சார்பில் நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் அமைக்கப்பட்ட தேர்தல் பணிக்குழுவில் அமைச்சர்கள், எம்பி, எம்எல்ஏக்கள், அதிமுக மாநில நிர்வாகிகள், மாவட் டச் செயலாளர்கள் என பலரும் இடம்பெற்றுள்ளனர். இவர்கள் 4 தொகுதிகளிலும் முகாமிட்டு தேர்தல் பிரச்சாரம் செய்து வருகின்றனர். திமுக வேட்பாளர்களுக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் உள்ள அக்கட்சி நிர்வாகிகள் தொகுதியில் முகாமிட்டு தீவிர பிரச்சாரம் செய்து வருகின்றனர்.

இந்நிலையில், திமுக பொருளாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டா லின் இன்று (நவ. 10) அரவக்குறிச்சி தொகுதியில் பிரச்சாரத்தை தொடங்கு கிறார். இத்தொகுதியில் நாளையும் பிரச்சாரம் செய்யும் அவர், 13-ம் தேதி புதுச்சேரி நெல்லித்தோப்பு தொகுதியில் போட்டியிடும் அம்மாநில முதல்வர் வி.நாராயணசாமியை ஆதரித்து பிரச்சாரம் செய்கிறார். 14, 15 தேதிகளில் திருப்பரங்குன்றம், 16, 17 தேதிகளில் தஞ்சாவூர் தொகுதிகளில் பிரச்சாரம் செய்ய இருப்பதாக திமுக அறிவித்துள்ளது.

SCROLL FOR NEXT