குடிசைமாற்று வாரிய செயல்பாடுகள், திட்டங்களின் தற்போதைய நிலை தொடர்பான ஆய்வுக்கூட்டம் அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் தலைமையில் நேற்று நடந்தது. அப்போது அமைச்சர் கூறிய தாவது:
குடிசைவாழ் மக்களின் மேம்பாட்டுக்கான திட்டங்களை விரைவுபடுத்த வேண்டும். குடிசை மக்களுக்கு வீடு வழங்கும் திட்டங்கள் அமல்படுத்து வதை உறுதி செய்ய வேண் டும். ‘தமிழ்நாடு தொலை நோக்குத்திட்டம் 2023’ன் இலக்கை அடைய மத்திய அர சின் ‘அனைவருக்கும் வீட்டு வசதி’ திட்டம் மூலம் நிதி பெற வேண்டும்.
தற்போது நடந்து வரும் வீடுகள் கட்டுமானப் பணி களை விரைவாக முடிக்கவும். தமிழகம் முழுவதும் குடிசை மாற்று வாரியக் கட்டிடங்களின் தரத்தை உறுதி செய்வதுடன், கட்டிடங்கள் பழுதுபார்த்தல் பணிகளுக்கு முன்னுரி மையும் அளிக்க வேண்டும் என்றார்.
இக்கூட்டத்தில் வீட்டுவசதித் துறை செயலர் தர்மேந்திர பிரதாப் யாதவ், குடிசைமாற்று வாரியத் தலைவர் ஷம்பு கல்லோலிகர் மற்றும் அதி காரிகள் பங்கேற்றனர்.