தமிழகம்

நெல்லித்தோப்பு இடைத்தேர்தல்: அதிமுக தேர்தல் பணிக்குழுவை மாற்றி அறிவிப்பு

செய்திப்பிரிவு

புதுச்சேரி நெல்லித்தோப்பு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ய அமைக்கப்பட்ட தேர்தல் பணிக்குழு வில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பாக அதிமுக தலைமை அலுவலகம் நேற்று வெளியிட்ட செய்தியில் கூறியிருப்ப தாவது:

புதுச்சேரி மாநிலம் நெல்லித் தோப்பு தொகுதியில் வரும் 19-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற வுள்ளது. இங்கு போட்டியிடும் அதிமுக வேட்பாளருக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ய அமைக்கப்பட்ட தேர்தல் பணிக்குழு திருத்தி அமைக்கப்பட்டுள்ளது.

தமிழக அமைச்சர்கள் சி.வி.சண் முகம், எம்.சி.சம்பத், அதிமுக அமைப்புச் செயலாளர் செ.செம் மலை, அனைத்துலக எம்ஜிஆர் மன்ற துணைச் செயலாளர் சொரத் தூர் இரா.ராஜேந்திரன், புதுச்சேரி மாநிலச் செயலாளர் பெ.புருஷோத் தமன், தேர்தல் பிரிவுச் செயலாளர் பி.கண்ணன், புதுச்சேரி மாநில அதிமுக சட்டப்பேரவைக் குழுத் தலைவர் ஏ.அன்பழகன், காரைக் கால் மாவட்டச் செயலாளர் எம்.வி. ஓமலிங்கம், மாநிலங்களவை உறுப் பினர் என்.கோகுலகிருஷ்ணன் ஆகியோர் தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்களாக செயல்படுவர்.

இவர்களுக்கு புதுச்சேரி மாநி லத்தைச் சேர்ந்த அதிமுக நிர்வாகிகளும், தொண்டர்களும் முழு ஒத்துழைப்பு அளித்து, சிறப்பான முறையில் தேர்தல் பணியாற்ற வேண்டும். முதல்வரும், அதிமுக பொதுச்செயலாளருமான ஜெயலலிதா ஒப்புதலோடு இந்த அறிவிப்பு வெளியிடப் படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட் டுள்ளது.

ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட பணிக் குழுவில் 5 பேர் மட்டுமே இருந்தனர். இப்போது பி.கண்ணன், ஏ.அன்பழகன், எம்.வி.ஓமலிங்கம், என்.கோகுலகிருஷ்ணன் ஆகியோர் கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளனர்.

SCROLL FOR NEXT