தஞ்சாவூர் சட்டப்பேரவைத் தொகுதி யில் பிரச்சாரம் செய்ய 8 அமைச் சர்கள் களம் இறங்கியுள்ளனர். ஒவ் வொரு அமைச்சருக்கும் குறைந்த பட்சம் 5 வார்டுகள் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், அதிமுகவினர் வீடு வீடாக வாக்கு கேட்டு பிரச்சாரம் செய்து வருகின்றனர்.
தஞ்சாவூர் தொகுதியில் வரும் 19-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்பு மனு தாக்கல் முடிந்து, இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அதன் படி, தஞ்சாவூர் சட்டப்பேரவைத் தொகுதியில் திமுக, அதிமுக, தேமுதிக, பாஜக, பாமக, நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் உட்பட 14 பேர் களத்தில் உள்ளனர்.
இதையடுத்து, தேர்தல் களை கட்டத் தொடங்கியுள்ளது. அதிமுக சார்பில் 8 அமைச்சர்கள், 5-க்கும் மேற்பட்ட எம்பிக்கள் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். ஒவ் வொரு அமைச்சருக்கும் குறைந்த பட்சம் 5 வார்டுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. இந்த வார்டு களில் அமைச்சர்களுடன், அதிமுக வினர் எந்தெந்த வீட்டில் எத்தனை வாக்காளர்கள் உள்ளனர், அவர்கள் எந்த கட்சியைச் சேர்ந்தவர்கள் என்ற விவரங்களுடன் வீடு வீடாக வாக்கு சேகரித்து வருகின்றனர்.
மாதாக்கோட்டை பகுதியில் அமைச்சர் விஜயபாஸ்கர், நீலகிரி ஊராட்சி பகுதியில் அமைச்சர்கள் வெல்லமண்டி நடராஜன், வளர் மதி, கீழவாசல் பகுதியில் அமைச் சர் துரைக்கண்ணு, புதுப்பட்டினம், மாரியம்மன் கோயில் பகுதியில் அமைச்சர் வேலுமணி, வண்டிக் காரத் தெரு பகுதியில் அமைச்சர் ஆர்.காமராஜ், கரந்தை பகுதியில் அமைச்சர் ஓ.எஸ்.மணியன், மருத் துவக் கல்லூரி பகுதியில் அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் ஆகி யோர் பொறுப்பேற்று பிரச்சாரம் செய்து வருகின்றனர். தொகுதி முழுவதும் வேட்பாளர் எம்.ரெங்க சாமியுடன், முன்னாள் அமைச்சரும் எம்பியுமான ஆர்.வைத்திலிங்கமும் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார்.
திமுக பிரச்சாரம்
அதேநேரத்தில், தேர்தல் பிரச் சாரப் பணியில் ஈடுபட்டுள்ள திமுக வினர் அனைவரும் ஒரே இடத்தில் வேட்பாளருடன் சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
திமுக வேட்பாளர் அஞ்சுகம் பூபதிக்கு ஆதரவாக, முன்னாள் அமைச்சர்கள் கே.என்நேரு, எஸ்.என்.எம்.உபயதுல்லா, முன் னாள் மத்திய அமைச்சர்கள் டி.ஆர்.பாலு, ரகுபதி, எஸ்.எஸ்.பழநி மாணிக்கம் மற்றும் திமுக மாவட் டச் செயலாளர்கள் துரை.சந்திரசேக ரன், எஸ்.கல்யாணசுந்தரம் ஆகி யோர் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.