தமிழகம்

சென்னையில் நாளை ரேஷன் குறைதீர் முகாம்

செய்திப்பிரிவு

சென்னை: சென்னையின் 19 மண்டல உணவுப்பொருள் உதவி ஆணையர் அலுவலகங்களிலும் நாளை (அக். 8) பொது விநியோகத் திட்ட குறைதீர் முகாம் நடைபெறுகிறது. இதுகுறித்து, உணவுப்பொருள் வழங்கல் ஆணையர் வெளியிட்ட செய்திக்குறிப்பு: பொது விநியோகத் திட்டத்தின் மூலம் வழங்கப்படும் சேவைகளைக் குடிமக்கள் எளிதில் பெறும் வகையில் தமிழகம் முழுவதும் ஒவ்வொரு வட்டத்திலும் மக்கள் குறைதீர் முகாம் ஒவ்வொரு மாதமும் நடத்தப்படும் என அரசு அறிவித்துள்ளது.

அதன்படி, அக்டோபர் மாதத்துக்கான பொது விநியோகத் திட்ட மக்கள் குறைதீர் முகாம் சென்னையில் உள்ள 19 மண்டல உதவி ஆணையர் அலுவலகங்களில் நாளை (அக். 8) காலை 10 முதல் பிற்பகல் 1 மணிவரை நடைபெற உள்ளது. குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம், முகவரி மாற்றம், கைபேசி எண் பதிவு , மாற்றம் செய்தல் மற்றும் புதிய குடும்ப அட்டை, நகல் குடும்ப அட்டை கோரும் மனுக்களைப் பதிவு செய்தல் ஆகிய சேவைகள் மேற்கொள்ளப்படும். ரேஷனில் பொருட்களை பெற நேரில் வர இயலாத மூத்த குடிமக்கள் உள்ளிட்டோருக்கு அங்கீகாரச் சான்று வழங்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT