கோப்புப் படம் | தமிழ்நாடு அரசு தலைமை செயலகம் 
தமிழகம்

தமிழக அரசின் சிறப்பு திட்டங்களை கண்காணிக்க சிறப்பு அதிகாரிகள் நியமனம் 

செய்திப்பிரிவு

சென்னை: தமிழகத்தில் செயல்படுத்தப்படும் சிறப்பு திட்டங்களை கண்காணிக்க சிறப்பு அதிகாரிகளை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழக அரசின் சிறப்பு திட்டம் செயலாக்க துறையின் மூலம் நான் முதல்வன் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த திட்டங்களை கண்காணிக்க மாவட்ட வாரியாக சிறப்பு அதிகாரிகளை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இவர்கள் மாதத்தில் நான்கு நாட்கள் தங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட மாவட்டங்களுக்கு நேரடியாக சென்று கள ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த உத்தரவின் முக்கிய அம்சம்:

  • சிறப்பு அதிகாரிகள் மாதத்தில் 4 நாட்கள் அல்லது தேவைப்படும் போது நேரடியாக சென்று ஆய்வு செய்ய வேண்டும்.
  • இந்த ஆய்வின் அனைத்து திட்டங்களின் பணிகளையும் கண்காணிக்க வேண்டும்.
  • ஆய்வின்போது பயனாளிகளின் உண்மை தன்மை குறித்து ஆய்வு செய்ய வேண்டும்.
  • திட்டங்கள் விதிகளின் படி செயல்படுத்தப்பட்டுள்ளதா என்பதை ஆய்வு செய்ய வேண்டும்.
  • ஏதாவது தவறு நடந்து இருந்தால் உடனடியாக அறிக்கை அளிக்க வேண்டும்.
  • எந்தவித பாகுபாடும் இல்லாமல் இந்த ஆய்வுப் பணியை மேற்கொள்ள வேண்டும்.
SCROLL FOR NEXT