முதல்வர் ஸ்டாலின் | கோப்புப்படம் 
தமிழகம்

மருத்துவமனையில் ஆளுநர் இல.கணேசன் | நலம் விசாரித்த முதல்வர் ஸ்டாலின் 

செய்திப்பிரிவு

சென்னை: உடல்நலம் பாதிக்கப்பட்டதை அடுத்து சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்ற வரும் ஆளுநர் இல. கணேசனை தொலைபேசியில் தொடர்பு கொண்டு முதல்வர் மு.க. ஸ்டாலின் நலம் விசாரித்தார்.

இதுதொடர்பாக மு.க. ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், "உடல்நலக்குறைவு ஏற்பட்டு சென்னையில் சிகிச்சை பெற்றுவரும் மணிப்பூர் மற்றும் மேற்கு வங்க மாநிலங்களின் ஆளுநர் இல. கணேசனை தொலைபேசியில் தொடர்புகொண்டு நலம் விசாரித்தேன். அவர் விரைந்து முழு உடல்நலன் பெற்று, தனது அன்றாடப் பணிகளுக்குத் திரும்பிட விழைகிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.

மணிப்பூர் ஆளுநராகவும், மேற்கு வங்கத்தின் பொறுப்பு ஆளுநராகவும் உள்ள இல. கணேசனுக்கு சில தினங்களுக்கு முன் திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து அவர் சென்னை அமைந்தகரையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைப் பெற்று வந்த இல.கணேசனின் உடல்நிலை தற்போது சீராக இருப்பதாகவும், இரண்டொரு நாட்களில் அவர் வீடு திரும்புவார் என்றும் தனியார் மருத்துவமனை நிர்வாகம் அறிவித்துள்ளது.

SCROLL FOR NEXT