மழை நீர் வடிகால் பணி 
தமிழகம்

கொளத்தூரில் 10மீ மழைநீர் வடிகால் பணி 36 மணி நேரத்தில் நிறைவு: சென்னை மாநகராட்சி தகவல்

செய்திப்பிரிவு

சென்னை: கொளத்தூரில் 10 மீட்டர் நீள மழைநீர் வடிகால் பணி 36 மணி நேரத்தில் நிறைவு செய்யப்பட்டதாக சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.

சென்னை மாநகராட்சியில் 200 வார்டுகளிலும் மழைநீர் வடிகால்களை அமைக்கும் பணயை மேற்கொண்டு வருகிறது. இதில் எத்தனை சதவீத பணிகள் முடிந்துள்ளது என்று சென்னை மாநகராட்சி மேயர் பிரியா தெரிவித்து இருந்தார்.

இந்நிலையில், திரு.வி.க.நகர் மண்டலம், கொளத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பூம்புகார் நகர் மற்றும் முதல் பிரதான சாலை, கொளத்தூர் பிரதான சாலை மற்றும் பேப்பர்மில்ஸ் சாலையான லட்சுமி அம்மன் கோயில் சந்திப்பு மற்றும் வேலவன் நகர் சந்திப்பு ஆகிய பகுதிகளில் ரூ.7.92 கோடி மதிப்பீட்டில் புதிய மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. பரபரப்பான இந்த சாலையில் தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளை சராசரியாக முடிக்க ஒரு மாத காலமாகும்.

ஆனால், மாநகராட்சி பணியாளர்கள், சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் வாரியம், தமிழ்நாடு மின்சார வாரியம் துறைகளின் ஒருங்கிணைப்பு காரணமாக 10 மீட்டர் நீளத்திற்கு புதிய மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகள் 36 மணி நேரத்தில் முடிந்துள்ளது என சென்னை மாநகராட்சி சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT