தமிழகம்

3 தொகுதிகளிலும் வெற்றி: அதிமுகவினர் கொண்டாட்டம்

செய்திப்பிரிவு

தமிழகத்தில் கடந்த 19-ம் தேதி அரவக்குறிச்சி, தஞ்சை, திருப்பரங் குன்றம் தொகுதிகளுக்கான தேர் தல் நடந்தது. வாக்கு எண்ணிக்கை நேற்று நடந்து, முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதில் ஆளுங்கட்சியான அதிமுக 3 தொகுதிகளிலும் அபார வெற்றியை பெற்றுள்ளது. காலை யில் முன்னணி நிலவரம் தெரிய ஆரம்பித்ததுமே, அதிமுக தொண் டர்கள் மகிழ்ச்சியில் ஆரவாரம் செய்தனர். அதிமுக தலைமை அலு வலகத்தில், அதிமுக நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள் தொண்டர் கள் என ஆயிரக்கணக்கானவர்கள் கூடி, இனிப்பு வழங்கி, பட்டாசு வெடித்து மகிழ்ச்சியை கொண் டாடினர்.

இதேபோல், தேர்தல் நடந்த மாவட்டங்களிலும், தொண்டர்கள் உற்சாகத்துடன் கொண்டாடினர்.

இரட்டிப்பு மகிழ்ச்சி

தற்போது முதல்வர் ஜெய லலிதா சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அவர் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டதை தொடர்ந்து, அவர் சாதாரண வார்டுக்கு கடந்த சில தினங்களுக்கு முன் மாற்றப்பட்டார். இதை அறிந்த அதிமுக முக்கிய பிரமுகர்கள், அதிமுக தொண்டர்கள் மகிழ்ச்சி வெள்ளத்தில் உள்ளனர். அன்றே முன்னாள் அமைச்சர்கள், நிர்வாகிகள் இனிப்பு கொடுத்தும், அன்னதானம் வழங்கியும் கொண் டாடினர். இந்நிலையில், தற்போது 3 தொகுதிகளிலும் வெற்றி பெற்றிருப் பது, அவர்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நேற்று காலை அப்போலோ மருத் துவமனை முன், அதிமுக முன்னாள் அமைச்சர்கள் பி.வளர்மதி, கோகுல இந்திரா, டி.கே.எம்.சின்னையா மற் றும் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் திரண்டனர். மருத்துவமனைக்கு வந்த பொதுமக்களுக்கு இனிப்பு கள் வழங்கி, வெற்றியை கொண் டாடினர். மருத்துவமனை வாயிலில் சிலர் தேங்காய் மற்றும் திருஷ்டி பூசணிக்காய் உடைத்தனர். டாக்டர் சுனில் என்பவர் ஆயிரம் இளநீர் களை பொதுமக்களுக்கு கொடுத் தார். மகளிரணியைச் சேர்ந்த ஒருவர் தன் கழுத்தில் அணிந்திருந்த தங்கச் செயினில் இருந்த முதல்வர் படத் துக்கு முத்தம் கொடுத்து மகிழ்ந்தார்.

SCROLL FOR NEXT