அரசு கேபிள் டிவி நிறுவனத்துடன் இணைந்து பொதுமக்களுக்கு இணைய சேவை வழங்க விரும்புவோர் நவம்பர் 30-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் மேலாண் இயக்குநர் ஜெ.குமர குருபரன் நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்ப தாவது:
மாவட்ட தலைநகரில்
தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம் இணைய சேவை வழங்குவதற்கான உரிமத்தை ஏற்கெனவே பெற்றுள்ளது. இதைப் பயன்படுத்தி ‘இல்லந்தோறும் இணையம்’ கொள்கை அடிப் படையில், முதல்கட்டமாக மாவட் டத் தலைநகரங்களில் அதிவேக அகண்ட இணைய (பிராட்பேண்ட்) சேவை கடந்த மார்ச் மாதம் முதல் வழங்கப்பட்டு வருகிறது.
2-ம்கட்டமாக, தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து நகராட்சிப் பகுதிகளிலும் இத் திட்டத்தை விரிவுபடுத்துவதற்கான விருப்பம் கோரும் விண்ணப்பங் களை இந்நிறுவனத்தின் இணைய தளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து நவம்பர் 15-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என தெரி விக்கப்பட்டிருந்தது.
கோரிக்கைகள்
இத்திட்டத்தில் சேர அதிக அளவில் வரவேற்பு இருக்கிறது. இதில் சேர்ந்து இணைய சேவை வழங்க இதுவரை 7,317 பேர் விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்துள்ளனர். விண்ணப்பிப்ப தற்கான கால அவகாசத்தை நீட்டிக்குமாறு பலரிடம் இருந்தும் கோரிக்கைகள் வந்துள்ளன. இதையடுத்து, விண்ணப்பங்களை பூர்த்தி செய்து அனுப்புவதற்கான கடைசி நாள் நவம்பர் 30-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
விவரம் பெற
எனவே, ‘இல்லந்தோறும் இணையம்’ திட்டத்தின் கீழ் மாநக ராட்சி, நகராட்சிப் பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களுக்கு இணைய சேவை வழங்க விரும்பு வோர் நவம்பர் 30-ம் தேதி வரை விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம்.
இத்திட்டம் தொடர்பான அனைத்து தகவல்களையும் www.tactv.in என்ற இணையதளத்தில் நவம்பர் 14-ம் தேதி முதல் பார்த்து தெரிந்துகொள்ளலாம். இது தொடர்பான சந்தேகங்களுக்கு 1800 425 2911 என்ற இலவச தொலைபேசி எண்ணையும் தொடர்புகொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.