தமிழகம்

பொள்ளாச்சி | பயோமெட்ரிக் கருவியில் கைரேகை பதியாததால் ரேஷன் பொருட்கள் கிடைக்காமல் பழங்குடியினர் தவிப்பு

செய்திப்பிரிவு

பொள்ளாச்சி: ஆனைமலை ஒன்றியத்துக்கு உட்பட்ட காளியாபுரம் ஊராட்சியில் உள்ள செல்லப்பிள்ளை கரடு பகுதியில், 76 பழங்குடியின குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு அங்குள்ள ரேஷன் கடை மூலம் பொருட்கள் வழங்கப்படுவது வழக்கம். பயோமெட்ரிக் பதிவு சிக்னல் கிடைக்காததால், தங்களுக்கு முறையாக ரேஷன் பொருட்கள் கிடைப்பதில்லை என பழங்குடியின மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறும் போது, ‘‘இங்கு வசிக்கும் பழங்குடியின மக்கள் கூலித்தொழிலுக்கு சென்று வருகிறோம். இங்குள்ள ரேஷன் கடையில் மாதத்துக்கு ஒருமுறை பொருட்களை கொண்டு வந்து விநியோகிக்கின்றனர். அதிலும் பயோமெட்ரிக் பதிவு கருவிக்கு சிக்னல் கிடைக்காததால், கைரேகை பதிவாகவில்லை எனக்கூறி பொருட்களை வழங்க மறுக்கின்றனர். இதனால் பயோமெட்ரிக் பதிவு கருவிக்கு சிக்னல் கிடைக்கும் வரை காத்திருந்து பொருட்கள் வாங்க வேண்டியுள்ளது. இதனால் வேலைக்கு செல்ல முடியாமல், ஒருநாள் வருவாய் பாதிக்கப்படுகிறது. இந்த பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றனர்.

SCROLL FOR NEXT