தமிழகம்

கிராமசபைக் கூட்டத்தில் வரவு செலவு கணக்கு கேட்ட மக்களிடம் வாக்குவாதம்: தாளவாடியில் பரபரப்பு

செய்திப்பிரிவு

ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் தாளவாடி ஊராட்சியில் நடந்த கிராமசபைக் கூட்டத்தில் வரவுசெலவு குறித்து கேள்வி எழுப்பிய பொதுமக்களிடம் ஊராட்சித் தலைவரின் கணவர் உள்ளிட்டோர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. காந்தி ஜெயந்தியையொட்டி, ஈரோடு மாவட்டத்தில் 225 ஊராட்சிகளில் கிராம சபைக் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. அந்தியூரை அடுத்த செப்புளிச்சாம்பாளையத்தில் நடந்த கூட்டத்தில் ஆட்சியர் எச்.கிருஷ்ணன் உன்னி பங்கேற்றார். கூட்டத்தில் ஆட்சியர் பேசும்போது, ‘மழைநீர் சேமிப்பை ஒரு இயக்கமாக செயல்படுத்த வேண்டும். சுத்தமான குடிநீர்‌ விநியோகத்தை உறுதி செய்ய வேண்டும். கொசுக்கள் உற்பத்தியாகாமல் தடுக்க வேண்டும். பருவமழையை எதிர்கொள்ள தேவையானநடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும், என்றார்.

கிராம சபை ஒத்திவைப்பு: நம்பியூர் ஊராட்சி ஒன்றியத்துக்குஉட்பட்ட கோசனம் ஊராட்சியில், கிராம சபைக்கூட்டத்தில் குறைவான பொது மக்களே பங்கேற்றதால், கூட்டம் ஒத்தி வைக்கப்பட்டது. கூட்டத்தில் பங்கேற்ற பொதுமக்கள் கூறியதாவது, கிராமசபை அறிவிப்பு பற்றி எங்களுக்கு முறையான எந்த தகவலும் கிடைக்கவில்லை. மேலும் கிராமத்தின் குடிநீர் தொட்டிகள் சரியாக சுத்தம் செய்வது இல்லை, என்றனர். அவர்களை நம்பியூர் வட்டார வளர்ச்சித்துறை அதிகாரிகள் சமாதானப்படுத்தினர்.

தாளவாடியில் வாக்குவாதம்: தாளவாடி ஊராட்சியில் நடந்த கிராமசபை கூட்டத்துக்கு ஊராட்சித் தலைவிதிராட்சாயினி குமார் தலைமை தாங்கினார். கூட்டத்தில், ஊராட்சியின் வரவு செலவு கணக்குகள், தீர்மானங்கள் குறித்து பொதுமக்கள் கேள்வி எழுப்பினர்இதற்கு அவர் பதில் தரமுடியாமல்திணறினார் கேள்வி எழுப்பிய பொதுமக்கள், பத்திரிகையாளர்களிடம், ஊராட்சித்தலைவரின் கணவர் குமார் மற்றும் அவரது ஆதரவாளர்கள் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து கூட்டம் ரத்து செய்யப்பட்டது.

SCROLL FOR NEXT