தமிழகம்

ஜவஹர்லால் நேரு படத்துக்கு அமைச்சர்கள் மரியாதை

செய்திப்பிரிவு

நேருவின் 128- வது பிறந்த தினத்தை முன்னிட்டு, அவரது உருவப்படத்துக்கு தமிழக அமைச்சர்கள், அதிகாரிகள் மரியாதை செலுத்தினர்.

மறைந்த முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் 128- வது பிறந்த தினம் நேற்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. தமிழக அரசு சார்பில், கிண்டி கத்திப்பாரா பகுதியில் அமைந்துள்ள நேரு சிலையின் அருகில் அவரது உருவப்படம் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்தது.

இப்படத்துக்கு, அமைச்சர்கள் டி.ஜெயக்குமார் (மீன்வளம்), கடம்பூர் ராஜூ (செய்தித்துறை), கே.பாண்டியராஜன் (பள்ளிக் கல்வித்துறை), பா.பெஞ்சமின் (ஊரக தொழில்துறை) ஆகியோர் மலர்தூவி மரியாதை செலுத்தி னர்.

நிகழ்ச்சியில், செய்தித்துறை செயலர் ஆர்.வெங்கடேசன், இயக்குநர் ஜெ.குமரகுருபரன், கூடுதல் இயக்குநர் எஸ்.பி.எழி லழகன் மற்றும் அதிமுக செய்தி தொடர்பாளர் சமரசம் ஆகியோர் பங்கேற்றனர்.

SCROLL FOR NEXT