முதல்வர் ஸ்டாலின் மரியாதை செலுத்தும் காட்சி 
தமிழகம்

காந்தி உருவச் சிலைக்கு தமிழக ஆளுநர், முதல்வர் ஸ்டாலின் மரியாதை

செய்திப்பிரிவு

சென்னை: காந்தியடிகளின் பிறந்த நாளை முன்னிட்டு எழும்பூர் அருங்காட்சியகத்தில் அமைந்துள்ள அவரது சிலைக்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, முதல்வர் மு.க.ஸ்டாலின், ஆகியோர் மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.

இந்தியாவின் தேசத் தந்தை மகாத்மா காந்தியின் 154-வது பிறந்த நாள் இன்று ( அக். 2) நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. நாட்டின் அனைத்து தலைவர்களும் தேசத் தந்தை காந்தியின் சிலைக்கு மலர்தூவி மரியாதை செய்து வருகின்றனர்.

அந்த வகையில், எழும்பூர் அருங்காட்சியகத்தில் அமைந்துள்ள காந்தி சிலைக்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி , தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினர். இதனைத் தொடர்ந்து சர்வோதய சங்கத்தினர் நடத்திய கலை நிகழ்ச்சிகளிலும் அவர்கள் கலந்து கொண்டனர்.

ஆளுநர், முதல்வரைத் தொடர்ந்து மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு, சென்னை மேயர் பிரியா உள்ளிட்டோரும் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

SCROLL FOR NEXT