தமிழகம்

மின்கட்டண உயர்வை திசை திருப்பவே திமுகவினர் மதத்தை கையில் எடுக்கின்றனர்: தமிழக பாஜக

செய்திப்பிரிவு

விழுப்புரத்தில் பாஜக மாநில துணைத் தலைவர் ஏ.ஜி.சம்பத் நேற்று செய்தியாளர்களிடம் கூறியது:

திமுக ஆட்சிக்கு வந்தால், விழுப்புரத்தில் முன்னாள் அமைச்சர் கோவிந்தசாமிக்கு மணிமண்டபம் கட்டப்படும் என்று விக்கிரவாண்டி இடைத் தேர்தலின்போது முதல்வர் ஸ்டா லின் குறிப்பிட்டார்.

இதுவரை இதனை நிறைவேற்றவில்லை. தமிழகத்தில் விலைவாசி உயர்ந்துள்ளது. மின் கட்டணத்தை உயர்த்திவிட்டனர். பேருந்து கட்டணத்தையும் உயர்த்த போகிறார்கள்.

இவற்றையெல்லாம் திசை திருப்பவே மதத்தை கையில் எடுத்திருக் கிறார்கள். விழுப்புரத்தில் ஏ.கோவிந்த சாமிக்கு மணிமண்டபம் கட்டி முடிக்கப்பட்டு அதன் திறப்பு விழாவில் அவரது மகன்என்ற முறையில் நான் கலந்து கொள்வேன் என்றார்.

SCROLL FOR NEXT