500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகளை அஞ்சல் நிலையங்களில் விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து கொடுத்து மாற்றிக் கொள்ளலாம் என்றும் ஒரு நாளைக்கு ஒரு நபர் அதிகபட்சம் ரூ.4 ஆயிரம் வரை பெறலாம் என்றும் கூறப்பட் டுள்ளது.
இது தொடர்பாக தமிழ்நாடு அஞ்சல் வட்டத்தின் அஞ்சல் மற்றும் வர்த்தக மேம்பாட்டுப் பிரிவு தலைவர் ஜே.டி.வெங்கடேஸ்வரலு கூறியதாவது:
நாடு முழுவதும் ரூ.500 மற்றும் ரூ.1,000 நோட்டுகள் நேற்றைய தினம் முதல் வாபஸ் பெறப்பட்டுள்ளன. வங்கிகள், அஞ்சல் நிலையங்கள் மூலம் ரூ.500 மற்றும் ரூ.1,000 நோட்டுகளை டிசம்பர் 30 வரை மாற்றிக்கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலை யில், பொதுமக்கள் ரூ.500 மற்றும் ரூ.1,000 நோட்டுகளை அஞ்சல் நிலையங்களில் கொடுத்து மாற்றிக்கொள்ளலாம். இதற்காக அஞ்சல் நிலையங்களில் ஒரு விண்ணப்பப் படிவம் தரப்படும். அதில், கேட்கப்பட்டுள்ள விவரங்களை பூர்த்தி செய்து அளிக்க வேண்டும். ஒரு நபர் ஒரு நாளைக்கு ரூ.4 ஆயிரம் வரை பணம் மாற்றிக்கொள்ளலாம். பணம் மாற்றிக்கொள்ள வருபவர்கள் அரசாங்கத் தால் வழங்கப்பட்ட அடையாள அட்டையை உடன் எடுத்து வர வேண்டும். அஞ்சல் நிலையங் களில் சேமிப்பு கணக்கு வைத்துள்ளவர்கள். தங்களது சேமிப்பு கணக்கு எண்ணை தெரிவித்து பணத்தை சேமிப்பில் சேர்க்கலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.