மூளைச்சாவு அடைந்தவரின் உடல் உறுப்புகள் தானத்தால் 6 பேருக்கு மறுவாழ்வு கிடைத்துள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் சூரப்பாளையம் கிராமத்தைச் சேர்ந் தவர் ஜெனிபர் தாஸ் (45). இவரது மனைவி சுதாராணி. இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட ஜெனிபர் தாஸ், கடந்த 10-ம் தேதி சென்னை போரூரில் உள்ள ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வந்தனர்.
இந்நிலையில் கடந்த 11-ம் தேதி அவர் மூளைச்சாவு அடைந் ததாக டாக்டர்கள் தெரிவித்தனர். இதையடுத்து கணவருடைய உடல் உறுப்புகளை தானம் செய்ய விரும்புவதாக சுதாராணி தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து டாக்டர்கள் குழுவினர் அறுவைச் சிகிச்சை செய்து அவரது உடலில் இருந்து உறுப்புகளை எடுத்தனர்.
டாக்டர் முகமது ரேலா குழுவினர் தானமாக கிடைத்த கல்லீரலை ஹரியாணா மாநிலத்தைச் சேர்ந்த 38 வயது பெண்ணுக்கு பொருத் தினர்.
6 பேருக்கு மறுவாழ்வு
கண்கள் 2 பேருக்கு பொருத்து வதற்காக ராமச்சந்திரா மருத்துவமனையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. இதயம், சிறுநீரகங்கள் சென்னையில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வரும் 3 பேருக்கு பொருத்தப்பட்டது. மூளைச் சாவு அடைந்தவரின் உடல் உறுப்புகள் தானத்தால் 6 பேருக்கு மறுவாழ்வு கிடைத்துள்ளது.