இல.கணேசன் | கோப்புப் படம் 
தமிழகம்

மணிப்பூர் ஆளுநர் இல.கணேசன் மருத்துவமனையில் அனுமதி

செய்திப்பிரிவு

சென்னை: மணிப்பூர் மாநில ஆளுநர் இல.கணேசன் உடல்நலக்குறைவு காரணமாக சென்னை அமைந்தகரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மணிப்பூர் மற்றும் மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களுக்கு ஆளுநராக இருந்து வரும் இல.கணேசனுக்கு இன்று காலை திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து அவர் சென்னை அமைந்தகரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் தற்போது சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தொடர்ந்து மருத்துவக் கண்காணிப்பில் இருந்து வரும் அவருக்கு சம்பந்தப்பட்ட தனியார் மருத்துவமனை மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். ஆளுநர் இல.கணேசன் உடல்நிலை குறித்து இன்று மாலை மருத்துவமனையின் சார்பில் அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT