சென்னை குடிநீர் வாரிய லாரிகள் | கோப்புப் படம்
சென்னை: வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு களப்பணிகளை கண்காணிப்பதற்காக சென்னை குடிநீர் வாரியம் சிறப்பு அலுவலர்களை நியமனம் செய்துள்ளது.
வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு களப்பணிகளை கண்காணிப்பதற்காக சென்னை குடிநீர் வாரியத்தின் சார்பில் அனைத்து பகுதிகளிலும் சிறப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். திருவொற்றியூர் முதல் சோழிங்கநல்லூர் வரை 15 பகுதிகளுக்கு மேற்பார்வை பொறியாளர்கள் மற்றும் செயற்பொறியாளர்கள் சிறப்பு அலுவலர்களாக நியமித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இவர்கள் பருவமழை காலங்களில் சென்னை குடிநீர் வாரியம் மேற்கொள்ளும் பணிகளை கண்காணிப்பதோடு, மாநகராட்சி மின்சார வாரியம் மற்றும் நெடுஞ்சாலை துறையுடன் இணைந்து ஒருங்கிணைப்பு பணிகளை மேற்கொள்ளவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பொதுமக்கள் தங்கள் பகுதியில் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் அகற்றல் தொடர்பான குறைகளை சிறப்பு அலுவலர்களை மூலம் தொடர்பு கொண்டு தீர்வைப் பெறலாம் என்று சென்னை குடிநீர் வாரியம் சார்பில் அறிவிக்கப்பட்டுளளது.
- திருவொற்றியூர் - பி. கற்பகம் (8144931000) - என்.சிங்காரவேலன் (8144930970)
- மணலி - டி.ஆர். பார்த்தசாரதி (8144904904 ) - வி.ஏ. எழுமலை (8144930570)
- மாதவரம்- ஆர்.சித்ரா (8144931010) - சி. ஜாய்ஸ் சுமதி(8144931122)
- தண்டையார்பேட்டை - பி.விஜயலட்சுமி (8144902902) - ஜே. லட்சுமி தேவி (8939856188 )
- இராயபுரம் - ஓ.பர்வீஸ் (8144903903) - பாவைக் குமார் (8144930444)
- திரு.வி.க.நகர் - ஏ.ராதாகிருஷ்ணன்(8144945000) - கே. இராமமூர்த்தி (8144930958)
- அம்பத்தூர் - ஆர். சிவமுருகன (8144934000) - வி. அன்பரசி (8144930956)
- அண்ணா நகர் - ஜே. சுகந்தி (8144967000) - எம்.எஸ்.அகிலாண்டேஸ்வரி (8144930728)
- தேனாம்பேட்டை - டி.மைதிலி (8144901901 ) - எஸ். வெண்ணிலா (8144931144 )
- கோடம்பாக்கம் - ஆர். கண்ணன் (8144930999) - ஏ.புவனேஸ்வரன் (8144930540)
- வளசரவாக்கம்- என். மணிமேகலை(8144906906) - ஏ.புஷ்பலதா(8144930625)
- ஆலந்தூர்- பி.சி,வள்ளி(8144907907) - கே. உமா (8144930690)
- அடையாறு - எஸ். ரவீந்திரநாதன் (8144923000) - கே.எம். வெங்கட்ராமன் (8144930848)
- பெருங்குடி - வி. திலகவதி( 8144905905) - எஸ்.பிரேமா (8144930924)
- சோழிங்கநல்லூர் - ஆர். மோகன் (8144930989) - கே.கலைச்செல்வன் (8144930589)