தமிழகம்

காஞ்சிபுரம் | காஸ் கிடங்குக்கு சீல் வைப்பு: உயிரிழப்பு எண்ணிக்கை 3 ஆக உயர்வு

செய்திப்பிரிவு

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டத்தில் காஸ் கிடங்கு வெடித்து ஏற்பட்ட விபத்தில் உயரிழந்தோர் எண்ணிக்கை 3 ஆக உயர்ந்தது. இதனைத் தொடர்ந்து வருவாய்த் துறையினர் அந்த காஸ் கிடங்குக்கு நேற்று சீல் வைத்தனர்.

காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத்தை அடுத்த தேவரியம்பாக்கத்தில் நேற்று முன்தினம் இரவு காஸ் கிடங்கில் இருந்த காஸ் சிலிண்டர்கள் வெடித்தன. இதில் 12 பேர் காயமடைந்தனர். இதில் பீஹாரைச் சேர்ந்த ஆமோத்குமார் என்ற இளைஞர் நேற்று முன்தினம் உயிரிழந்தார். மேலும் 7 பேர் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையிலும், 5 பேர் செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வந்தனர்.

வருவாய்த் துறையினர் ஆய்வு: இதில் செங்கல்பட்டு அரசுமருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சந்தியாவும், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஜீவானந்தமும் உயிரிழந்தனர். இதனைத் தொடர்ந்து உயிரிழந்தோர் எண்ணிக்கை 3 ஆக உயர்ந்தது. இந்தச் சம்பவத்தை தொடர்ந்து வாலாஜாபாத் வட்டாட்சியர் லோகநாதன் தலைமையிலான வருவாய்த் துறையினர் ஆய்வு செய்தனர். பின்னர் அந்த காஸ் கிடங்குக்கு நேற்று சீல் வைத்தனர்.

SCROLL FOR NEXT